காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் : ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு

அரசாங்கத்தினால் காணாமற்போனவர்கள் தொடர்பான அலுவலகம் (Office on Missing Persons) அமைக்கப்பட்டுள்ளதை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலட் (Michelle Bachelet) பாராட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UN Human Rights Council) 39ஆவது அமர்வில் உரையாற்றும்போது அவர் இலங்கை தொடர்பாக கருத்து வெளியிட்டார்.

நல்லிணக்க பொறிமுறையை ஏற்படுத்தும் விடயத்தில் அதிகாரிகளின் செயற்பாடு ஓரளவு மெதுவாக இடம்பெற்ற போதிலும் ஏனைய செயற்பாடுகள் (Consultation Process) மற்றும் நிறுவனத்தின் ஏனைய நடவடிக்கைகள் (Institutional Capacity Building) பாராட்டுக்குரியவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமற்போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குப் பதிலளிப்பதற்காக இந்த அலுவலகம் செயற்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முழுமையான அலுவலகம் (Office on Reparations) ஒன்றை நிறுவுவதற்கான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தல் (Accountability), உண்மையைக் கண்டறிதல் (Truth Seeking) என்பனவற்றுக்கான வேலைத்திட்டங்களில் முன்னேற்றம் காண வேண்டியமை, நாட்டின் ஸ்திரத்தன்மை என்பன இந்த விடயத்தில் முக்கியமான விடயங்களாகும் என்றும் மிச்செல் பச்சிலட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018