ஸ்ரீலங்காவின் அடுத்த ஜனாதிபதி எனது சகோதரரே மஹிந்த சூளுரை!

ஸ்ரீலங்காவில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தனது சகோதரரே போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூழுரைத்துள்ளார்.

தனது மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுபவம் மற்றும் வயது காணாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020 ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன முன்னணி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற குழப்பமான சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார்கள் என ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. எனினும் 19ஆம் அரசியல் சீர்திருத்தத்திற்கமைய தானும் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் களமிறங்க முடியும் என அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, த ஹிந்துவிற்கு வழங்கிய செவ்வியின் போது ஸ்ரீலங்காவில் இடம்பெறவுள்ள அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தனது மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ போட்டியிடமாட்டார் என தெரிவித்துள்ளார்

ஸ்ரீலங்காவின் 19 ஆவது அரசியல் திருத்த சட்டத்தின் காரணமாக தம்மால் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இயலாது எனவும் கூட்டு எதிர்கட்சியிலிருந்து யாரேனும் ஒரு நபரை மாத்திரமே வேட்பாளராக நிறுத்த முடியும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்

எனினும் 19 ஆம் திருத்த சட்டம் தொடர்பிலும் தாம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் நீதிமன்றத்தில் போராட முடியும் எனத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ச, இந்த விடயம் தொடர்பில் இதுவரை தீர்மானம் எதுவும் முன்னெடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லை 35 க்கும் அதிகமாக காணப்படவேண்டிய நிலையில் தமது மகன் நாமல் ராஜபக்ஷவிற்கு தற்போது வயது 30 ஆக காணப்படுவதனால் 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட முடியாத நிலை காணப்படுவதாவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

எனவே 2019ஆம் ஆண்டு தேர்தலில் தமது சகோதரர் ஒருவரையே நிச்சயமாக வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக தெரிவித்தார், ஆனால், அது யார் என்பதை கட்சியும், கூட்டணியுமே தீர்மானிக்கும்” எனவும் தெரிவித்தார்.


எனினும் தமது சகோதரர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகவுள்ளார் எனத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ச பொதுமக்களின் இறுதித் தீர்மானமே தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்முடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராகவில்லை எனவும் மகிந்த சுட்டிகாட்டியுள்ளார்

இதேவேளை இந்திய அரசாங்கத்துடன் பல காலமாக நீடித்திருந்த இறுக்கமான உறவை சுமூகமாக்குவதற்கான நேரம் வந்துள்ளதாகவும், அதற்கான ஆரம்பமாக தனது இந்த விஜயம் அமைந்துள்ளதாகவும் அவர் நேர்காணலின் போது குறிப்பிட்டுள்ளார்

தேர்தல் போன்ற ஒரு நாட்டின் உள்ளுர் விவகாரங்களில் வேறு நாடுகள் தலையிட கூடாது. எனவும் தமது கருத்து இந்தியாவிற்கு மட்டுமல்ல, அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என சுட்டிக்காட்டியுள்ளார்

ஸ்ரீலங்காவின் அரசியல் விவகாரங்களில் இந்தியாவின் தலையீடு குறித்த முன்னைய கருத்துக்கள் தொடர்பில் வருந்துகிறீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் கடந்த காலத்தை மறந்து நாம் அனைவரும் முன்னோக்கிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்

தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவுடனான முதலீடு மற்றும் தொடர்பாடல் ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

இதேவேளை விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியின் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உரையாற்றவுள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் புதுடெல்லிக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018