ஸ்ரீலங்கா கடற்பரப்பில் கடற்படையினரின் அதிவேக தாக்குதல் படகுகளின் அதிரடி நடவடிக்கை!

நீர்கொழும்பு வென்னப்புவ கடலில் படகு ஒன்றில் றியூனியன் தீவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த பெண் ஒருவர் உட்பட 90 பேர் நீர்கொழும்பு மேற்கு கடற்பகுதியில் வைத்து ஸ்ரீலங்கா கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர் என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் லெப்.கொமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார்.

“நீர்கொழும்பில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் படகு ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த 90 இலங்கையர்களை சிறிலங்கா கடற்படையின் இரண்டு அதிவேக தாக்குதல் படகுகள் இடைமறித்து, கொழும்புத் துறைமுகத்துக்கு கொண்டு வந்தன.

இந்தப் படகு றியூனியன் தீவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தது, அங்கிருந்து வேறு நாடுகளுக்குச் செல்ல இவர்கள் திட்டமிட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 90 பேரில் ஒருவர் பெண் எனவும் தெரிவித்துளளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு ரங்கல கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, ஆரம்ப கட்ட விசாரணைகளில் இவர்கள் மட்டக்களப்பு, உடப்பு, சிலாபம், அம்பாறை, மன்னார், மாத்தளை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்வர்களில் 66 தமிழர்களும், 22 சிங்களவர்கள், 2 முஸ்லிம்கள் உட்பட 90 பேரே படகில் சட்டவிரோதமாக பயணித்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. இவர்கள் சட்ட விரோதமாக அவுஸ்ரேலியா செல்வதற்காக தலா 3 லட்சம் ரூபா முகவர் ஒருவருக்கு வழங்கியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

இவர்கள் சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்” இவர்களை இன்று கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு றியூனியன் தீவு என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு பிரெஞ்சுத் தீவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018