இந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை- சேவாக்

இங்கிலாந்து- இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 இழந்தது. லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற போட்டிகளில் கடுமையாக போராடிய போதிலும் வெற்றியை பறிக்க முடியவில்லை.

இந்திய அணி கேப்ட்ன் விராட் கோலி மட்டுமே தொடர் முழுவதும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. தவான் 162 ரன்களும், கேஎல் ராகுல் 299 ரன்களும், ரகானே இரண்டு அரைசதத்துடன் 257 ரன்களும், புஜாரா ஒரு சதத்துடன் 278 ரன்களும் அடித்தனர்.இவர்கள் அனைவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதுவே தோல்விக்கு முதன்மையான காரணம் என்று முன்னாள் தொடக்க வீரரும் அதிரடி பேட்ஸ்மேனும் ஆன சேவாக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இங்கிலாந்து தொடரை 4-1 என கைப்பற்றியதற்கு வாழ்த்துக்கள். இந்தியா சிறப்பாக விளையாடியது. ஆனால், நிலையான ஆட்டத்தை பேட்டிங்கில் வெளிப்படுத்தவில்லை.

ரிஷப் பந்த், லோகுஷ் ராகுல் கடைசி டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார்.இந்த தொடர் முழுவதும் விராட் கோலி, பந்து வீச்சாளர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினா்ரகள். வெளிநாட்டு தொடரில் சிறப்பாக விளையாட இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்’’ என்று பதவிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
யாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி
கொழும்பு, கனடா
22 APR 2019
Pub.Date: April 24, 2019
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019