அரசாங்கம் பதவி விலக வேண்டும் ; டலஸ் அழகப்பெரும

எதிரணியின் ஆர்ப்பாட்டத்தின்போது வழங்கப்பட்ட பாலில் அரசாங்கம் விஷம் வைத்ததாகக் குற்றம் சுமத்திய கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெரும, இவ்வாறான செயற்பாட்டை மேற்கொண்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த வாரம் கூட்டு எதிர்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் பேரணியின் போது விஷம் கலந்த பால்பக்கட் வழங்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், சுனயீனமுற்று மக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, சிலர் இன்னும் குணமடையாமல் இருக்கின்றனர். நானும், அந்தப் பாலை பருகியதால் சுகயீனமுற்றிருந்தேன்.

நாட்டு மக்களுக்கு விஷம் வழங்கி அவர்களை மரணிக்க நினைக்கும் ஒரே அரசாங்கம் இலங்கை வரலாற்றிலேயே இந்த ஒரு அரசாங்கமாகத் தான் இருக்கும்.

இதனை எண்ணி நாம் கவலையடைகின்றோம். அரசியல் ரீதியாக பகைகள் இருப்பது புதியதல்ல. ஆனால், இதுவரை யாரும் எதிர்ப்பினை வெளியிடும் மக்களுக்கு விஷம் வைத்து அவர்களை மரணிக்கச் செய்தது கிடையாது.

தற்போது வரை குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதிருப்பதும் பெரும் கவலையளிக்கின்றது.

உண்மையில், மக்களை கொலை செய்ய முயன்ற இந்த அரசாங்கம் இதனையிட்டு வெட்கப்பட வேண்டும். அல்லது பதவியை துறந்து செல்ல வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளும் இந்த அரசாங்கம், தற்போது மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கும் வகையில் எரிப்பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.

புதிய எரிபொருள் சூத்திரத்திற்கு இணங்க இரண்டு மாதத்திற்குள் மூன்று முறை எரிப் பொருள் விலை அதிகரிக்கப்படுகின்றது. அதற்கு சமனான வகையில் மற்றைய பொருட்களின் விலை மற்றும் பஸ் கட்டணங்களும் அதிகரித்த வண்ணமேவுள்ளது.

ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது விலை சூத்திரம் ஜனாதிபதிக்கோ, எரிப்பொருள் அமைச்ருக்கோ அல்லது அமைச்சரவையின் ஏனைய அமைச்சருக்கோ தெரியவில்லை.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கூட இதனை தெரிந்துக் கொள்வதற்கும் இடம் இல்லாதாக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள விலை சூத்திரத்தில் சூழ்ச்சியுள்ளது எனும் சந்தேகம் நிலவுகிறது“ என தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018