சர்வதேச தரத்துக்கு மனித உரிமைகள் சட்டத்தை இலங்கை நிறைவேற்ற வேண்டும்

பயங்கரவாதத் தடைச்சட்டம் இரத்துச் செய்யப்பட்டு சர்வதேச மனித உரிமைகள் தரத்துக்கு அமைய புதிய சட்டத்தை இலங்கை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 39ஆவது பொதுக் குழுக் கூட்டத்தில் நேற்றையதினம் தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் செயற்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையிலேயே இது பற்றிச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான கைதுகள் குறைந்திருக்கின்றபோதும், அச்சட்டத்தின் கீழ் ஏதாவது கைதுகள் இடம்பெற்றால் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அதனைத் தெரியப்படுத்துதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை பற்றிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

செயற்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை மாத்திரமன்றி ஏனைய நாடுகளுக்கும் குறித்த செயற்குழு மேற்கொண்ட விஜயங்களை அடிப்படையாகக் கொண்டு முழுமையான அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.

இதில் இலங்கை பற்றி தொடர்ந்தும் குறிப்பிடுகையில், தன்னிச்சையான தடுத்துவைத்தல் நிலைமைகளை மாற்றுவதில் பல்வேறு முன்னேற்றகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி சித்திரவதைகளுக்கு எதிரான சமவாயம் பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது.

இலங்கை முழுவதிலுமுள்ள 371 நிலையங்களில் 18 வயதுக்குக் குறைந்த 14 ஆயிரம் சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் தொடர்பான இலங்கையின் சட்ட ஏற்பாடுகள் சர்வதேச தரத்தில் அமையவில்லை. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை போன்ற நாடுகளில் பல காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விடயத்தில் தீர்வை வழங்குவதில் அரசியல் ரீதியான ஆர்வம் பெரிதளவில் காணப்படவில்லையென ஆசிய சட்ட வள நிலையம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியது. இதனைத் தீர்ப்பதற்குப் போதிய நிதி மற்றும் ஆளணி வளங்கள் இல்லையென்றும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018