30ஆவது மகாவலி விளையாட்டு விழா

மகாவலி வலயங்களில் வாழ்கின்ற இளைஞர் யுவதிகளின் விளையாட்டுத் திறமைகளை இனங்கண்டு அவர்களை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்லும் நோக்கில் மகாவலி அதிகாரசபையின் மகாவலி மத்திய நிலையத்தினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற 30ஆவது மகாவலி விளையாட்டு விழா எதிர்வரும் 15ஆம், 16ஆம் திகதிகளில் எம்பிலிப்பிட்டிய மகாவலி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதன் ஆரம்பநாள் விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபவும், இறுதிநாள் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதம விருந்தினர்களாக கலந்து கொள்ளவுமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 3000 வீர,வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர். இம்முறைவிளையாட்டு விழாவில், முப்படை மற்றும் பொலிஸ் ஆகியவற்றில் பணிபுரிகின்ற இளம் விளையாட்டு வீரர்களுக்கும் முதற்தடவையாக வாய்ப்புவழங்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,போட்டித் தொடரின் முதல் நாளன்று (15) கரப்பந்தாட்டம்,வலைப்பந்தாட்டம்,மெய்வல்லுநர் உள்ளிட்ட 36 போட்டிநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. எனினும், இதுவரைநடைபெற்றபோட்டிகளின் முடிவில் மகாவலி எச் வலயம் 57 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

1986ஆம் ஆண்டுஅப்போதைய மகாவலி அமைச்சராக கடமையாற்றிய அமரர் காமினி திஸாநாயக்கவின் எண்ணகருவுக்கு அமைய மகாவலி வலயங்களில் வாழ்கின்ற இளைஞர், யுவதிகளின் விளையாட்டுத் திறமையினை இனங்காணும் நோக்கில் மகாவலி விளையாட்டு விழா வருடாந்தம் இடம் பெற்று வருகின்றது.

இந்த விளையாட்டு விழாவின் மூலம் இதுவரை 86 சர்வதேச வீரர்கள் உருவாகியுள்ளனர். இதில் இலங்கையின் நாமத்தைசர்வதேசத்துக்கு எடுத்துச் சென்ற முன்னாள் வீராங்கனையான ஸ்ரீயானிகுலவன்ச,மகாவலி விளையாட்டு விழாவின் மூலம் உருவாகியவீராங்கனையாவார்.இவர் 1992, 1996 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான 100 மீற்றர் தடைதாண்டலில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், 2016 றியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்துகொண்ட சுமேத ரணசிங்கவும் மகாவலி வலயத்தைச் சேர்ந்தவீரர் என்பதும் மற்றுமொருசிறப்பம்சமாகும்.

இம்முறை எம்பிலிப்பிட்டியவில் நடைபெறவுள்ள மகாவலி விளையாட்டு விழாவுக்கான தீபச் சுடர் கொழும்பிலிருந்து தனது பயணத்தை கடந்த 6ஆம் திகதி ஆரம்பித்தது. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு தீபச் சுடர் ஏற்றப்பட்டு சைக்கிள் சவாரியாக எம்பிலிப்பிட்டியவுக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், எதிர்வரும் 15ஆம் திகதிபோட்டிகள் நடைபெறும் எம்பிலிப்பிட்டி மகாவலி மைதானத்தை வந்தடையவுள்ளது.

1111 கிலோ மீற்றர் தூரம் பயணிக்கும் இந்த தீபச் சுடர் 111 மகாவலி வலய கிராமங்களைக் கடந்துசெல்வதுடன், 111111 பலாமரக் கன்றுகளும் நடப்படவுள்ளமை மற்று மொரு சிறப்பம்சமாகும்.

மகாவலி விளையாட்டு விழா தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்றுமுன்தினம் (11) கொழும்பிலுள்ள மகாவலி மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க கருத்து வெளியிடுகையில்,

மகாவலி அமைச்சராக உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய இம்முறை போட்டிகளில் சம்பியன் பட்டத்தை வெல்லும் வலயத்துக்கு சகல வசதிகளையும் கொண்ட உடற்பயிற்சி மத்திய நிலையம்,போட்டித் தொடரின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு மகாவலி வலயத்தில் நிலப்பரப்பு, விசேட திறமைகளை வெளிப்படுத்தும் 10 வீரர்களுக்கு விளையாட்டு புலமைப்பரிசில் மற்றும் மேலும் 20 பேருக்கு தொழில் பயிற்சிகள், சிறந்தவீரர் மற்றும் வீராங்கனையாகத் தெரிவாகின்றவர்கள் கல்விகற்ற பாடசாலைக்கு உபகரணங்கள், மகாவலி சாதனையை முறியடிக்கின்ற வீரர்களுக்கு விசேட கொடுப்பனவு மற்றும் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த வீரர்களுக்குத் தேவையான விளையாட்டுஉபகரணங்களும் இம்முறை விளையாட்டு விழாவில் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இம்முறைவிளையாட்டு விழாவுக்கு இலங்கையின் முன்னணி தொலைத் தொடர்பு வழங்குனர்களான டயலொக் ஆசியாட்டா பி.எல்.சி நிறுவனம் அனுசரணை வழங்கவுள்ளது.

இவ்விளையாட்டு விழாவுக்கான அனுசரணை காசோலையை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு டயலொக் குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணயக்காரவிடமிருந்து மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க,மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சரத் சந்திரசிறி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Ninaivil

செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018