அந்தரத்தில் மிதந்த உலகின் வேகமான மனிதன் உசேன் போல்ட்!

உலகின் வேகமான மனிதர் உசேன் போல்ட், பூஜ்ஜியம் புவியீர்ப்பு சக்தியுள்ள விமானத்தில் பறந்துகொண்டு ஷெம்பேங்ன் அருந்திய காட்சி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. நேற்று (புதன்கிழமை) ஸீரோ-ஜீ விமானத்தில் பறந்துகொண்டு தனது விண்வௌி ஆராய்ச்சி நண்பர்களுடன் அந்தரத்தில் மிதந்து ஷெம்பேங்ன் அருந்தினார்.

பொது விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்காக பயன்படுத்தப்படும் விசேடமாக தயாரிக்கப்பட்ட விமானத்தில், 8 தடவைகள் ஒலிம்பிக் சாம்பியனான போல்ட் இதன்போது தனது எடையற்ற தன்மையை உணர்ந்தார்.

அத்துடன், விண்வெளியில் குமிழ்களை அருந்துவதற்கு விண்வெளி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படும் ஒருவகை ஷாம்பெயின் போத்தலில் இருந்து வௌிப்படும் நுரைகளையும், குமிழ்களையும் குவளையில் பிடித்து அருந்துமாறு உசேன் போல்ட்டுக்கு சவால் ஒன்று முன்வைக்கப்பட்டது.

தனது புதிய Central Coast Mariners காற்பந்தாட்ட லீக் போட்டிகளை நிறைவு செய்த பின்னர் ஐரோப்பாவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் விண்வௌி ஆராய்ச்சி கூடமொன்றில் நேரத்தை கழித்தார். 32 வயதான போல்ட் உலகின் வேகமான மனிதராக கருதப்படுவதுடன் காற்பந்தாட்டத்திலும் ஆர்வம் கொண்டவராக உள்ளார்.

அவர் கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப்பதங்கங்களை வென்றார். அந்த சாதனை பதக்கங்கள் triple double என வர்ணிக்கப்படுகின்றது. ஜமெக்காவின் குறுந்தூர ஓட்டப்பந்தய வீரர் தடகள போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், தனது ஆர்வத்தை காற்பந்தாட்டத்தின் பக்கம் திருப்பிய நிலையில், புதிய அவுஸ்திரேலிய காற்பந்தாட்ட அணியுடன் கடந்த 3 வாரங்கள் இணைந்து செயற்பட்டார்.

காற்பந்தாட்ட போட்டிகளுக்கு மத்தியில் ஒய்வு பெறும் நோக்கில் ஐரோப்பாவுக்கு சென்றிருந்தார். அங்கு விண்வௌி ஆராய்ச்சி வீரர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்படும் செம்பேங்ன் போத்தல் வடிவமைப்பாளரின் புதிய கண்டுபிடிப்பை வௌிப்படுத்தும் நிகழ்வில் அவர் பங்கேற்றார்.

இந்த செம்பேங்ன் நிறுவனம் விண்வௌி சுற்றுலா துறை மீது முதலீடு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளது. செம்பேங்னின் வடிவமைப்பாளர் கூறுகையில், போத்தலில் இருந்து வௌிப்படும் செம்பேங்ன் திரவ குமிழ்களை கட்டுப்படுத்தி குவளைகளில் பிடித்து அருந்தும் சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அமெசன் இன்ங் என்ற நிறுவனத்தை ஸ்தாபித்த ரிச்சர்ட் பிரான்ஸன், கோடீஸ்வரரான ஜெஃப் பெஸோஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிறைவேற்று அதிகாரி எலோன் மஸ்க் ஆகியோர் செல்வந்த சுற்றுலாப் பயணிகளை அண்டவௌிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு செல்லும் சுற்றுலாப் பயணிகள் விண்வௌியில் உள்ள கிரகங்களின் வளைவரையைப் பார்க்கும் வாய்ப்பை பெறுகின்றனர்.

Ninaivil

திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018