தமிழகத்தில் கேள்வி கேட்க தகுதியற்ற கட்சி திமுக- பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு

சுரண்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

காமராஜர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களால் மட்டுமே இன்றும் தமிழகம் பயன் பெற்று வருகிறதே தவிர 50 ஆண்டுகள் ஆண்ட கட்சிகளால் எந்த மாற்றமும் செய்ய முடியவில்லை. காமராஜரால் தொடங்கப்பட்ட பல பள்ளிகள் இன்று மூடப்பட்டு வருகின்றன.

ஒரு நாட்டை, மாநிலத்தை முன்னேற்ற எத்தனை நாட்கள், ஆண்டுகள், மாதங்கள் தேவை என அரசியல்வாதிகளிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் பதிலை வைத்து எடை போட முடியும். தமிழகத்தில் கேள்வி கேட்க அருகதை அற்ற கட்சி ஒன்று உண்டு என்றால் அது தி.மு.க. தான்.

ஏழைகளுக்காக வங்கிகள் செயல்பட வேண்டும் என்பதற்காக ஆட்சிக்கு வந்ததும் நாட்டில் அனைத்து மக்களும் வங்கி கணக்கு தொடங்க வழிவகைகள் செய்து தரப்படும். பணம் இல்லாவிட்டாலும் வங்கி கணக்கை தொடங்குங்கள் என சொன்னவர் பிரதமர் மோடி. ஏழைகளின் நலனுக்காக 125 கோடி மக்களுக்கும் அறிமுகப்படுத்த நபர் இல்லாவிட்டாலும் வங்கி கணக்கு தொடங்க வழி வகைகள் செய்தார்.

இதனால் நாட்டில் 4 வருடத்தில் 32 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.62 ஆயிரம் கோடி வங்கியில் போடப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தின் மூலம் அனைவருக்கும் தொழில் தொடங்கும் நம்பிக்கை தந்துள்ளார் மோடி. அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜ், மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019