மன்னாரில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு மீட்பு

மன்னாரில் தொடர்ந்துவரும் அகழ்வுப் பணிகளின்போது கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இன்று (வெள்ளிக்கிழமை) 71ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே இந்த சந்தேகத்திற்கிடமான மனித எச்சம் கண்nடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எலும்புக்கூட்டின் கைகள் இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட நிலையிலும், கால்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று குறுக்காக பிணைக்கப்பட்ட விதத்திலும் காணப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த மனித எலும்புக்கூடு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்படதா? அல்லது மத சடங்குகளின் அடிப்படையில் அவ்வாறு புதைக்கப்பட்டதா? என்ற சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

தற்போது மீட்கப்பட்டுவரும் மனித எச்சங்கள், சாதாரண நிலையில் புதைக்கப்பட்டவை என நிச்சயம் ஏற்று கொள்ள முடியாத போதிலும், இறுதிக்கட்ட பரிசோதனையின் பின்னரே எதனையும் வெளிப்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 126 முழுமையான மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 120 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, பொதி செய்யப்பட்டு, நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018