சமல் ராஜபக்ஷவையே ஜனாதிபதி வேட்பாளர் என மஹிந்த கூறியிருக்கலாம் : வாசு

சமல் ராஜபக்ஷவையே எண்ணத்தில் வைத்துக்கொண்டே ஜனாதிபதி வேட்பாளராக தனது சகோதரர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கலாம் என கூட்டு எதிரணியின் உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனது சகோதரர் ஒருவர் பொதுவேட்பாளராக தெரிவு செய்யப்படலாம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே பொதுவேட்பாளராக தெரிவு செய்யப்படலாம் என பரவலாக பேசப்படுகின்றது.

மேலும் கட்சிகளில் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இருக்கின்ற போது, அரசியல் அனுபவம் இல்லாத கோத்தபாய ராஜபக்ஷவை எவ்வாறு பொதுவேட்பாளராக நியமிப்பது என எதிரணியினருக்குள் எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள வாசுதேவ நாணயக்கார எம்.பி.,

சமல் ராஜபக்ஷ மாத்திரமே தற்போது அரசியலில் ஈடுபடுகின்றார். சமல் ராஜபக்ஷவின் பெயரை எண்ணத்தில் வைத்துக்கொண்டே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தனது சகோதரர் ஒருவர் வேட்பாளராக போட்டியிடலாம் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கலாம்.

இதேவேளை பசில் ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் தமது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்யாமல் அவர்களை பொதுவேட்பாளர்களாக கவனத்தில் கொள்ள முடியாது என்றார்.


Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018