பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதிர்கட்சி தலைவர்கள் பக்கோடா விற்க வேண்டும் - அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை

அடுத்து வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் பெரும்பானமையான தொகுதிகளில் வெற்றி பெறும் முயற்சியில் ஆளும் பாஜக ஈடுபட்டுள்ளது. இதற்காக ஆளும் பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை கட்டவிழ்த்து வருகிறது. அதற்கு பதிலடி தரும் விதமாக சமாஜ்வாதி கட்சியினர் பாஜகவிற்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள எடாவா மாவட்டத்தில் சமாஜ்வாதி கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த சைக்கில் பேரணி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசினார்.   அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடுத்த தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்தால், எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் தெருக்களில் பக்கோடா விற்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். 

பாஜவினர் ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அச்சுருத்தல்களை விடுத்து வருகின்றனர். அதில் இருந்து  ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சைக்கில் பேரணி நடத்தப்படுகிறது. 

வரும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் அதோடு நாட்டில் ஜனநாயகத்தின் கதை முடிந்துவிடும். உத்திரப்பிரதேச மக்கள் மிகவும் விழிப்புடன் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு பல்வேறு சதிகளை செய்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய பாஜகவிற்கு 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018