பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் மனைவி குல்சூம் உடல் அடக்கம் செய்யப்பட்டது

பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்ட குல்சூமின் உடல் லாகூரில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் பண்ணை வீட்டில் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

நவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக் குறைவால் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார். 68 வயதான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.

தனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டு நவாஸ் ஷரிப் விண்ணப்பித்திருந்தார். அவரையும் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோரையும் 3 நாட்கள் பரோலில் விடுவித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

குல்சூம் நவாஸ் ஆன்மா சாந்தியடைய லண்டன் நகரின் ரிஜென்ட் பார்க் பகுதியில் உள்ள பெரிய மசூதியில் நேற்று ‘ஜனாஸா’ தொழுகை நடைபெறுகிறது. பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்ட குல்சூமின் உடல் லாகூரில் உள்ள ஜத்தி உம்ரா பகுதில் அமைந்திருக்கும் நவாஸ் ஷரிப் பண்ணை வீட்டில் இன்று  மாலை அடக்கம் செய்யப்பட்டது.

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019