கரிபியன் பிரீமியர் லீக்: சாம்பியன் பட்டத்தை வென்றது ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ்

கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி டிரினிடாடில் உள்ள பிரையன் லாரா விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் கண்ட கயானா அமேசான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்தது. கயானா சார்பில் லூக் ரோன்சி அதிகபட்சமாக 44 (35) ரன்களை குவித்தார்.

ட்ரின்பகோ சார்பில் கரி பியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.148 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பகோ அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக தெனேஷ் ராம்டின், பிரண்டன் மிக்கல்லம் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 52 ரன்களை குவித்திருந்த நிலையில், 7-வது ஓவரை கிறிஸ் கிரீன் வீசினார். அதை எதிர்கொண்ட மெக்கல்லம் பந்தை தூக்கி அடிக்க டெல்போர்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அடுத்ததாக களமிறங்கிய கொலின் முன்ரோ தொடக்கம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 12-வது ஓவரை ரொமாரியோ ஷெப்பர்டு வீச 24 (30) ரன்களுடன் தெனேஷ் ராம்டின் வெளியேறினார்.

அதிரடியாக விளையாடி கடைசி வரை ஆட்டத்தின் இறுதிவரை களத்தில் நின்ற கொலின் முன்ரோ 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 68 (39) ரன்களை சேர்த்தார். டேரன் பிராவோ காயம் காரணமாக 4 ரன்களில் ஆட்டத்தின் பாதியில் வெளியேறினார்.கடைசியில் 17.3 வெற்றி இலக்கை எட்டிய ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

Ninaivil

திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018