ஆசிய கோப்பை - ஐந்து முறை சாம்பியனான இலங்கையை வெளியேற்றியது ஆப்கானிஸ்தான்

ஆசிய கோப்பையை ஐந்து முறை கைப்பற்றிய இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் இருந்து வெளியேற்றியது ஆப்கானிஸ்தான். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின.

அபுதாபியில் நடந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 249 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரஹமத் ஷா அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி சார்பில் திசாரா பெராரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் சிக்கி 41.2 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. யுனைடெட் அரபு எமிரேட்சில் இலங்கை அணி பெறும் 7-வது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பையில் 1986, 1997, 2004, 2006 மற்றும் 2014 என ஐந்து முறை இலங்கை அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அப்படிப்பட்ட இலங்கை அணியை ஆப்கானிஸ்தான் அணி 91 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன், இந்த தொடரில் இருந்தும் வெளியேற்றியதை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

Ninaivil

திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018