சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டதான எஸ்.பீயின் கருத்தை மறுத்தது இராணுவம்

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக, அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணி தெரிவித்துள்ள கருத்தை, இராணுவம் முற்றாக மறுத்துள்ளது.

அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணியின் கடந்தவார ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் அமைச்சர்களான, எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த எஸ்.பி.திஸாநாயக்க எம்.பி, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எவரையும் இராணுவத்தினர் கொலை செய்யவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் கருத்தை முழுமையாக நிராகரிப்பதாகவும், இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார்.

இறுதி யுத்தக் காலத்தில், எஸ்.பி.திசாநாயக்க, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருந்துள்ளார். ஆகவே அவ்வாறான ஒருவர் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறும் கருத்தை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியுமா? என்றும் அவரிடம் வினவியபோது, இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறும் கருத்தானது, அடிப்படை ஆதாரமற்றது என்றும் ஆகவே இவ்வாறான கருத்துகளை, இராணுவம் முழுமையாக நிராகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறிய கருத்தை, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019