அமெரிக்க டொலர் பலமடைந்தமை உலக நாடுகளுக்குப் பலவீனம்

அமெரிக்க டொலர் பலமடைந்து அதற்கு எதிரான நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்திருப்பது இலங்கையை மாத்திரமன்றி மேலும் பல உலக நாடுகளைப் பாதித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த நிலைமையால் இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எரிபொருள் விலை அதிகரிப்புத் தொடர்பில் பந்துல குணவர்த்தன எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். டொலர் பலமடைந்து அதற்கு எதிரான ஏனைய நாணயங்களின் பெறுமதி மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தியாவிலும் இந்த நிலைமை காணப்படுகிறது.

இது விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியினருக்கு முழுநாள் விவாதமொன்றுக்கு இடமளிக்க முடியும். முன்னைய காலத்தில் எரிபொருள் விற்பனையில் பாரிய இலாபத்தை ஈட்டியிருந்தனர். தற்பொழுது இந்த இலாபம் குறைந்துள்ளது. முழு உலகமும் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கும் போது அதனால் ஏற்படும் பாதிப்பை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

விலை குறையும் போது அதனால் ஏற்படும் நன்மையை மக்களுக்கு அளிப்போம் என்று கூறியிருந்தோம். அதற்கமைய இதுவரை நன்மையை வழங்கியிருந்தோம் என்றார்.

Ninaivil

திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018