துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை இந்திய பாரம்பரியப்படி சேலை அணிந்து வரவேற்ற ரோமானியா துணை பிரதமர்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா மற்றும் மால்டா நாடுகளுக்கு ஒரு வாரம் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். 

தனது பயணத்தின் முதல்நாடாக செர்பியா சென்ற அவருக்கு தலைநகர் பெல்கிரேடில் உள்ள செர்பியா மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செர்பியா மற்றும் இந்திய உயர்அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. 

பின்னர் வெங்கையா நாயுடு மற்றும் செர்பியா அதிபர் அலக்சாண்டர் வூசிக் இடையே தனியாக சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தனது பயணத்திட்ட நாடுகளில் இரண்டாவதாக மால்டாவுக்கு சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அந்நாட்டு அதிபர் மரியே லூயிசே கொலீரோ ப்ரெகாவை சந்தித்தார். அப்போது இருநாட்டு உறவுகள் மற்றும் பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 

இந்நிலையில், தனது பயணத்தின் மூன்றாவது மற்றும் கடைசி நாடான ரோமானியாவிற்கு சென்றடைந்தார். தலைநகர் பசாரெஸ்ட் விமான நிலையத்தில் ரோமானியா துணை பிரதமர் அனா பிர்ச்சல், இந்திய பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து வெங்கையா நாயுடுவை வரவேற்றார்.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018