100 தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் பயிற்சிக்காக தமிழ்நாட்டிற்கு

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் இலங்கையின் இராஜாங்க கல்வி அமைச்சிற்கும் இடையில் மிக விரைவில் புரிந்துனர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாகவும், இதன்படி மிக விரைவில் 100 ஆசிரியர்களை தமிழ் நாட்டிற்கு பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்திருக்கின்ற கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று (20.09.2018) காலை கல்வி அமைச்சிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். 

இதன்போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிர்மலன் சார்ள்ஸ், தமிழ் நாட்டு கல்வி பள்ளித்துறை செயலர் பிரதீப் யாதவ், இலங்கை கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், 

நீண்ட ஒரு இடைவேளைக்கு பின்பு இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவர் கண்டி கொழும்பு யாழ்ப்பாணம் என பல பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

அநேகமாக இந்தியாவில் இருந்து அமைச்சர்களோ உயர் அதிகாரிகளோ இலங்கைக்கு வருகை தந்தால் அவர்கள் கொழும்பில் தங்கியிருந்து முக்கியஸ்தர்களை சந்தித்து விட்டு திரும்ப சென்றுவிடுவார்கள். ஆனால் அமைச்சர் செங்கோட்டையன் பல பகுதிகளுக்கும் சென்று இங்கிருக்கின்ற உண்மையான நிலைமைகளை பார்வையிட்டுள்ளார். 

இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நாங்கள் கல்வி தொடர்பான பல முக்கிய விடயங்களை கலந்துரையாடியுள்ளோம். அதில் இலங்கையில் இருந்து தமிழ் மொழி மூல 100 ஆசிரியர்களை தமிழ்நாட்டிற்கு அனுப்பி அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். 

இதனை முழுமையாக செயற்படுத்துவதற்கு அமைச்சர் செங்கோட்டையன் ஒப்புக் கொண்டுள்ளார். அதன்படி மிக விரைவில் தெரிவு செய்யப்பட்ட 100 ஆசிரியர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். 

மேலும் எங்களுடைய கல்வி அபிவிருத்திக்கு தமிழ் நாடு அரசாங்கம் தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். அத்துடன் அவருடைய விஜயத்தின் பயனாக இன்று மீண்டும் தமிழ்நாட்டு அரசாங்கத்துடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

அது மட்டுமல்லாமல் இந்த நாட்டில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார். இந்த செய்தியை அவர் மத்திய, மாநில அரசாங்கத்திற்கு கொண்டு செல்வதாகவும் உறுதியளித்துள்ளார் எனவும் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018