தேசிய மெய்வல்லுனர் அணியில் 10 தமிழ் பேசும் வீரர்கள் சேர்ப்பு

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் 106 பேர் கொண்ட தேசிய மெய்வல்லுனர் அணி (18) அறிவிக்கப்பட்டது.இதில் வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களையும் சேர்ந்த தமிழ் பேசும் வீரர்களுக்கு தேசிய மெய்வல்லுனர் குழுவில் வாய்ப்பு வழங்க இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் நடைபெறவுள்ள தகுதிகாண் போட்டிகள் வரை இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த மூன்று குழாத்திலும் 106 வீர, வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். அத்துடன், பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஆசிய விளையாட்டு விழாவில் முதல் 6 இடங்களைப் பெற்றுக்கொண்ட வீரர்கள் சிறப்புக் குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இவ்வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தால் வழங்கப்படுகின்ற புள்ளிகளில், 1100 என்ற இலக்கை தாண்டிய வீரர்களுக்கும் இந்தக் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.அவ்வாறு இல்லாவிட்டால், குறித்த வீரர்கள் சர்வதேச மெய்வல்லுனர் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற வேண்டும்.

மேலும், சர்வதேச அரங்கில் இளம் வீரர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றவர்களும், கனிஷ்ட வீரர்களில் முதல் 50 இடங்களுக்குள் இடம்பெற்ற வீரர்களும் சிறப்புக் குழுவில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதில் 19 வீரர்களும், 5 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.

Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018