திமுகவிற்கு குடைச்சலை கொடுக்கும் நிலானி விவகாரம் - பின்னணி என்ன?

நடிகை நிலானி விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட காந்தி என்கிற லலித்குமார் திமுக கட்சியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. 

சென்னை கே.கே. நகரில் லலித்குமார் என்கிற வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள, அதற்கு நடிகை நிலானியே காரணம் என செய்திகள் தீவிரமாக பரவியது. மேலும், லலித்குமாரும், நிலானியும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் வெளியாகி, லலித்குமாரை, நிலானி ஏமாற்றியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது போல் செய்திகள் வெளியாகின.   

ஆனால், நிலானி அளித்த பேட்டியில், தன்னுடன் நட்பாக பழகிய லலித்குமாரை ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்ததாகவும், ஆனால், அவர் பல பெண்களை ஏமாற்றியவர் என்பது தெரிந்ததும், அவரை விட்டு விலகியதாகவும் கூறினார். அதேபோல், நிலானிக்கு லலித்குமார் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார் என்பதற்கு ஆதரமாக நிலானியுடன் லலித்குமார் செல்போனில் பேசும் ஆடியோக்கள் வெளியாகின. 

இந்நிலையில், நேற்று வீட்டில் கொசு மருந்தை அருந்தி நிலானி தற்கொலை முயற்சி செய்தார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதில் எதிர்பார்க்காத வகையில், இந்த விவகாரம் திமுக தரப்பிற்கு சற்று குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது. காரணம், தற்கொலை செய்த லலித்குமார் திமுக ஆதரவாளர். அவர் கலைஞர் மற்றும் ஸ்டாலினை சந்தித்து எடுத்த புகைப்படங்களை தனது முகநுல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதேபோல், உதயநிதி ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பிலும் இருந்துள்ளார். 

குறிப்பாக, அவர் பெயரை கூறித்தான், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக பல பெண்களை லலித்குமார் ஏமாற்றியுள்ளார். அவ்வளவு ஏன்? திமுக மேடையில் பேசுவதற்கு உனக்கு வாய்ப்பு வாங்கி தருகிறேன் நிலானியிடமும் கூறி ஏமாற்றியுள்ளார். உதயநிதி பெயரை கூறியே, தனக்கு திமுகவில் செல்வாக்கு அதிகம், பல காவல் அதிகாரிகளை எனக்கு தெரியும் என நிலானியை அவர் மிரட்டி வந்துள்ளார்எனவே, உதயநிதி பெயரை சொல்லி மிரட்டியதாக புகார் அளிக்கும் படி நிலானியை போலீஸ் வற்புறுத்தியதாம். ஆனால், என் செல்போன் ஆடியோ ஆதாரங்களை வைத்துக்கொள்ளுங்கள். நான் யார் மீதும் புகார் கொடுக்கவில்லை என நிலானி கூறிவிட்டாராம். 

எனவே, என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் காவல் துறை இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

Ninaivil

திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019
திருமதி கனகாம்பிகை நவரட்ணம்
திருமதி கனகாம்பிகை நவரட்ணம்
யாழ். திருநெல்வேலி
கனடா
10 APR 2019
Pub.Date: April 13, 2019