முல்லைத்தீவில் காந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு

முல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேசசபையின் அமர்வு, நேற்று நடைபெற்றது.

இதன்போதே,  உறுப்பினர்களான சின்னராசா - லோகேஸ்வரன் மற்றும் தவராசா - அமலன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

எனினும், ஏனைய உறுப்பினர்கள் இந்த நினைவேந்தலுக்கு ஆதரவளித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் 2ஆம் திகதியன்று, மகாத்மா காந்திக்கு முல்லைத்தீவில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இரு உறுப்பினர்களான லோகேஸ்வரன் மற்றும்  அமலன் ஆகியோர் கடும் எதிர்பை வெளியிட்டுள்ளனர்.

அதாவது, உயிர் தியாகங்கள் பல நிகழ்ந்த இந்த மண்ணில் காந்திக்கு நினைவேந்தல் நடாத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. என அவர்கள் தமது கடும் எதிர்புகளை வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஏனைய உறுப்பினர்கள் இந்நிகழ்வுக்கு பூரண ஆதரவு வழங்குவதால், நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுமென தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019