எமது ஒற்றுமையீனமே எமக்கு எதுவும் கிடைக்காமைக்கு காரணம்

எங்கள் மத்தியில் உள்ள ஒற்றுமையீனமே நல்லிணக்க அரசாங்கத்திடமிருந்து எமக்கு எதுவும் கிடைக்கவில்லை என வடமாகாண உறுப்பினர் வே.சிவமோகன் தெரிவித்தார்.

புக்காரா விமானக் குண்டு வீச்சினால் உயிரிழந்த 21 மாணவர்களின் 23 ஆவது ஆண்டு நினைவுகூரல் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனது உரையில்

நல்லிணக்க அரசாங்கம் ஒன்று எங்களின் ஆதரவுடனேயே உருவானது. ஆனால் அந்த அரசாங்கத்தினால் எமக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் எங்கள் மத்தியல் உள்ள ஒற்றுமையீனமே நாங்கள் ஒன்றுமையாக இருந்தால் கிடைக்கவேண்டியவை கிடைத்திருக்கும்.

குண்டு வீச்சில் உயிரிழந்த 21 மாணவர்களின் ஆத்மா சாந்தியடையும் இனிமேலும் இதுபோன்ற அவலங்கள் ஏற்படக்கூடாது நாங்கள் ஒற்றுமையுடன் ஒன்றாக நின்று செயற்படவேண்டுமென்றார்.

இதனையடுத்து மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் பேசுகையில்

யுத்த்தினால் உடைந்த நினவைுச் சின்னங்களை எம்மவர்கள் ஏற்படுத்தியபோது அதனை அரசு அழித்தது. யுத்த நினைவுச் சின்னங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்பதே அவரசின் நோக்கம். இதனால் தான் முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எம்மவர்களிடையே ஒற்றுமை இன்மை அர்ப்பணிப்பு தெளிவான சிந்தனை இருந்ததால் தான் முள்ளிவாய்க்காலில் தூபி எழுப்பமுடியும்.

குண்டு வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்ட காலத்திலிருந்து அரச விடுதலை உணர்வு தியாக சிந்தனைகள் மக்களிடம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் மக்களைப் அச்சுறுத்துவதற்காகவே விமான ஷெல் வீச்சுத்தாக்குதல்களை மேற்கொண்டது. எம்மீது விதிக்கப்பட்ட இன அடக்குமுறை உரிமைப் போராட்டம் என்பவற்றை நினைவு கூர்ந்து அவற்றை அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்துச் செல்லவேண்டும். என்றார்.

மாகாண சபை உறுப்பனர் கே.தர்மலிங்கம் தெரிவிக்கையில்,

பிள்ளைகளைப் பறி கொடுத்த தாய்மார்கள் புத்திரசோகம் தாங்கமுடியாது ஏதோ விதமாக இச் சம்பவம் ஏற்பட்டு விட்டது அன்றைய சம்பவத்தை மனதில் நிறுத்தி உயர்ந்த நிலைக்கு நாம் மீண்டெழ அனைவரும் முயற்சிக்கவேண்டும் அதுதான் 21 மணாவர்களின் தியாகங்களில் நிறைவேறவேண்டும் என்றார்.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018