இலங்கை படையினர் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் புலிகளின் அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர் எல்.ஏ. அசீஸ் இராபோசன விருந்தளித்துள்ளார். இதனை தாம் கடுமையாக எதிர்த்ததாக உலக தேசப்பற்றுள்ள இலங்கை பேரவை தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் வேளையில் ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் அமைதிக் காத்து வருவதாகவும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
அரசாங்கம் முன்னெடுத்து்ள வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக நல்லிணக்க செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பில் இருந்து தமக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
எவ்வாறாயினும் இலங்கை தூதுவரின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பாவில் வாழும் சிங்களவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
எது எப்படி இருந்த போதிலும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை சிங்கள இனவாத அமைப்புகள் புலம்பெயர் புலிகளின் அமைப்புகள் என்றே கூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.