மனித உரிமைக்காக கனடா தொடர்ந்தும் பாடுபடும்: ஜஸ்ரின்

உள்நாட்டினதும், சர்வதேசத்தினதும் சட்டத்தின் ஆட்சி, ஜனாநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்காக கனடா தொடர்ந்தும் பாடுபடும் என, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக இடம்பெறும் நெல்சன் மண்டேலா சமாதான உச்சி மாநாட்டில் நேற்று (திங்கட்கிழமை) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், இன அடிப்படையில் சிறுபான்மையினர், பெண்கள், சிறுமிகள் மற்றும் பழங்குடியினர் மீதான நியாயமற்ற செயற்பாடுகளை கனடா தொடர்ந்து கண்கானிக்கும்.

அதேபோன்று, ரோஹிங்கிய அகதிகள், வடக்கு ஈராக்கின் யஜிதிகள் மற்றும் வெனிசுலா மக்களுக்காகவும் நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் எனத் தெரிவித்தார்.

அண்மையில் சவுதி அரசு மனித உரிமை ஆர்வலரான பெண்ணொருவரை சிறையில் அடைத்திருந்தது. அதை கனடா கண்டித்திருந்தது. சவுதியின் உள்நாட்டு விடயங்களில் கனடா தலையிடுவதாக தெரிவித்து இரு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019