தியாக தீபம் லெப் கேணல் திலீ­ப­ன் அவர்க்ளின் 31 ஆம் ஆண்டு நினைவு!

தமிழ் மக்கள் உரிமைகளுடன் தாயக மண்ணில் தலைநிமிர்ந்து வாழ்வதை உறுதிசெய்வதற்காய் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி, இறுதியில் வல்லரசுகளின் மௌனத்தால் தன் இன்னுயிரை நீத்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்தியத்தின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

கடந்த 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி ஆரம்பித்த திலீபனின் தியாகப் பயணம் ஐந்து அம்சப் கோரிக்கைகளை பிரதானமாக கொண்டிருந்தன.

1.பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

2.புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இடைக்கால அரசு நிறுவப்படும் வரை ‘புனர்வாழ்வு’ என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

3.வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

4.இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவற்படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்படவேண்டும்.

5.தமிழ் கிராமங்கள் பாடசாலைகள் ஆகியவற்றில் நிலைகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும் என்பவையே குறித்த கோரிக்கைகள்.

ஈழத் தமிழ் மக்கள் சார்பிலான குறித்த கோரிக்கைளை இந்திய உயர்ஸ்தானிகருக்கு அனுப்பப்பட்டு 24 மணித்தியாலய அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. அதற்கு எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில், செப்டெம்பர் 15ஆம் திகதிவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. அன்றிலிருந்து உண்ணாவிரத போராட்டமாக உருவெடுத்த திலீபனின் போராட்டம் இதே நாளில் இம்மண்ணில் வித்தாகியது.

எம்மைப் போன்று எதிர்கால சந்ததியும் துன்பியல் வாழ்க்கைக்குள் சென்றுவிடக் கூடாதென்பதற்காகவும், எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை என்பதற்காகவும் மக்கள் கிளர்ந்தெழ வேண்டுமென தான் உயிர்துறக்கும் தருவாயில் இறுதி உரையில் கூறியிருந்தார்.

அதற்கு பின்னர் மக்கள் போராட்டம் வீறுகொண்டு எழ, தியாகி திலீபனின் உயிர்த்தியாகமே காரணமாக அமைந்தது. இன்றுவரை திலீபனின் கனவை நனவாக்க தமிழ் மக்கள் போராடினாலும், அது வெறும் தீர்வுகளற்ற போராட்டமாவே உள்ளது.

தியாகி திலீபனின் நினைவுதினத்தை முன்னெடுக்க கூடாதென கடந்த காலங்களைப் போன்று நல்லாட்சியிலும் முட்டக்கட்டைகள் போடப்பட்டன. எனினும், அவற்றை தகர்த்தெறிந்து தமிழ் மக்கள் விரவி வாழும் தமிழர் தாயகத்தில் இன்று அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
யாழ். உடுப்பிட்டி
சுவிஸ் Dietikon(ZH)
10 JUN 2019
Pub.Date: June 11, 2019