அம்பயரின் தவறான முடிவை சூசகமாக கிண்டல் செய்த தல தோனி!

இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு அம்பயரின் தவறான முடிவுகளும் காரணம் என கேப்டன் தோனி சூசகமாக கூறியுள்ளார். 

ஆசியக் கோப்பைத் தொடரில், இன்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் 5வது போட்டியில், இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் மோதின. இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விட்டதால், இந்தப் போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா, தவான், பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தோனி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

இதில் டாஸ் வென்று, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய முகமது சேஷாத் 124 ரன்களும், அவருக்குப் பின் வந்த முகமது நபி 64 ரன்களும் குவித்தனர். 

இதையடுத்து, 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய அம்பதி ராயுடு 57 ரன்களுக்கும், ராகுல் 60 ரன்களுக்கும் வெளியேற, அவர்களையடுத்து வந்த கேப்டன் தோனி 8 ரன்களில், நடுவரின் தவறான முடிவால் எல்பிடபுள் ஆனார்.தொடர்ந்து வந்த வீரர்களும் சொதப்ப, நிலைத்து நின்று ஆடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 44 ரன்களில் இருந்த போது, நடுவரின் மற்றொரு தவறான முடிவால் எல்பிடபுள்யு ஆனார்.

இதன்பின் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால், ஆட்டம் இறுதியில் சமனில் முடிந்தது.இந்நிலையில், பரிசளிப்பு விழாவில் பேசிய இந்திய அணியின் கேப்டன் தோனி, முக்கிய வீரர்கள் விளையாடாததாலும், சுழற்பந்து வீச்சாளர்கள் குறைவாக இருந்ததுமே அணி வெற்றி பெற முடியாததற்கு காரணமாக கூறினார்.

மேலும், ரன் அவுட்களும் முக்கிய காரணம் என கூறிய அவர், சில தவறுகள் நடந்தது அதைப் பற்றி கூறினால் எனக்கு அபராதம் விதிப்பார்கள் என நடுவரின் தவறான முடிவுகளை சூசகமாக விமர்சனம் செய்தார்.

இது ஒருபுறம் இருக்க, தோனிக்கும் தினேஷ் கார்த்திக்கிற்கும் தவறாக அவுட் கொடுத்த நடுவர் கிரிகரி பிராத்வெயிட்டை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019