தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் சரத்துகள் அடங்கிய 20ம் திருத்தச் சட்டமூலத்தை ஜே வி பி முன்வைத்துள்ளநிலையில், அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்று அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறி இருப்பதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சட்டமூலமானது, புதிய அரசியல் யாப்பின் அடிப்படையினைக் கொண்டிருப்பதாகவும், அதனால் கூட்டமைப்பு அதற்கு ஆதரவளிக்க தீர்மானித்திருப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரனை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டிருக்கும் குறித்த ஆங்கில பத்திரிகையின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிவதற்காக அதன் பொதுசெயலாளர் மாவை சேனாதிராஜாவை  தொடர்பு கொண்டது.

இதன்போது கருத்து வெளியிட்ட மாவைசேனாதிராஜா, 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளிப்பது சம்மந்தமாக இதுவரையில் கட்சி எந்த நிலைப்பாட்டையும் மேற்கொள்ளவில்லை என்று கூறினார்.

இதுதொடர்பில் குறித்த சட்டமூலம் விவாதத்துக்கு வரும் சமயத்தில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துரையாடல் நடத்தி தீர்மானம் மேற்கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019