பாஸிநவ் ஷோவில் பங்கேற்கிறார் தமிழக கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக்

இந்தியாவின் மிகவும் பிரபலமாக உள்ள லைவ் கேம் ஷோ ஆப்பான ‘பாஸிநவ்’வின் (BaaziNow), ஸ்டாரி தர்ஸ்டே ஷோவில் தமிழக முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக் பங்கேற்க உள்ளார். 

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் நிறுவனமான டைம்ஸ் இன்டர்நெட், கடந்த பிப்ரவரி மாதம் ‘பிரைன்பாஸி’ என்ற கேம் ஆப் ஒன்றை அறிமுகம் செய்தது. பின்னர், அதன் பெயர் 'பாஸிநவ்' என மாற்றப்பட்டது. இதில், லைவ்வாக நடக்கும் கேள்விப் பதில் நிகழ்ச்சியில், சரியான பதில் அளிப்பவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இந்த கேம் ஆப்பை, இதுவரையில் 5 மில்லியன் பேர் டவுன்லோட் செய்துள்ளதாகவும், 3 கோடி ரூபாய் வரை பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதனிடையே, பாஸிநவ் ஆப்பில் ‘ஸ்டாரி தர்ஸ்டே’ என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்டாரி தர்ஸ்டேவில், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை லைவ் செய்யப்படும் கேம்களை பிரபலங்கள் தொகுத்து வழங்குவார்கள். அந்த வகையில், பாஸிநவ் ஆப்பில் இன்று இரவு 8.30 மணிக்கு லைவ் செய்யப்படும் ‘ஸ்டாரி தர்ஸ்டே’ ஷோவில், தமிழக கிரிக்கெட் வீரரான முரளி கார்த்திக் பங்கேற்க உள்ளார்.

இந்த ஷோவில், அவர் ஆப் பயனர்களிடம் லைவ்வில் கேள்வி கேட்பார். அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பவர்களுக்கு மிகப்பெரிய பரிசுத்தொகை வழங்கப்படும்.இந்த லைவ் ஷோவில் முரளி கார்த்திக் உடன் தொகுப்பாளர் ஒருவரும் பங்கேற்பார். அவர் விளையாட்டின் விதிகளை அனைவருக்கும் விளக்குவார். மேலும், இடைய இடையே முரளி கார்த்திக்கிடம் பேட்டியும் செய்வார். 


Ninaivil

திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018