கயல் ஆனந்தியின் பரியேறும் பெருமாள் படத்தைப் பார்த்து வாழ்த்திய விஜய் சேதுபதி!

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் கயல் ஆனந்தி மற்றும் கதிர் ஆகியோரது நடிப்பில் வந்த பரியேறும் பெருமாள் படத்தைப் பார்த்த நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்த படம் பரியேறும் பெருமாள். இப்படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில், இப்படம் சினிமா பிரபலங்களுக்கு சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் படம் மற்றும் படத்தில் நடித்திருந்த சினிமா நட்சத்திரங்களை வெகுவாக பாராட்டியுள்ளனர். 

இது குறித்து விஜய் சேதுபதி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நடிகர் கதிருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். சித்தார்த் கூறுகையில், பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவின் புதிய பயணம். மாரி செல்வாரஜின் இயக்கம் சிறப்பு. என்னை மிகவும் பாதித்த படம். இப்படம் முடிந்த பிறகும் என்னை பல மணிநேரம் படத்தோடு பயணிக்க வைத்தது.

கதிரின் நடிப்பு உணர்ச்சிப்பூர்வமானது என்று குறிப்பிட்டுள்ளார்.இயக்குனர் ராம் கூறுகையில், அரசியல் ரீதியாக உணர்வுப்பூர்வமான படம். திருநெல்வேலியை மிகவும் அழகாக காட்டியுள்ளார். கடந்த 10 வருடங்களில் மிகச்சிறந்த படம் என்று உறுதியாக சொல்ல முடியும் என்று கூறியுள்ளார். 

தொடர்ந்து யோகி பாபு கூறுகையில், தரமான படத்தில் நடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஆண்டவன் கட்டளை படத்திற்கு பிறகு நல்ல கதை கொண்ட படத்தில் நடித்தது மகிழ்ச்சி. தொடர்ந்து குணச்சித்திர ரோலில் நடிப்பதற்கு ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். 

இதையடுத்து, மூடர்கூடம் இயக்குனர் நவீன் கூறுகையில், அடித்தட்டு மக்களின் தேவைகளையும், அவர்களது வாழ்வியலையும் அழகாக காட்டியுள்ளார் மாரி செல்வராஜ் என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் லெனின் பாரதி கூறுகையில், சாதிய வக்கிரங்களை விலக்கி மாற்றுப்பாதையில் பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். 

இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறுகையில், தரமான படத்தை திரையில் பார்த்தால் மட்டும் தான் வெற்றி கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூகத்திற்கு தேவையான ஒரு படம் என்றார். 

Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018