ஐஸ் பாணியில் சுற்றிச் சுற்றி பிக் பாஸுக்கு ‘ஐஸ்’ வைக்கும் ரித்து!

ஐஸ்வர்யா பாணியில் தற்போது ரித்விகாவும் அடிக்கடி பிக் பாஸ் புராணம் பாட ஆரம்பித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 2 இன்னும் சில தினங்களில் முடிவடைய இருக்கிறது. மக்கள் வாக்குகளின் அடிப்படையில் ரித்விகா முதலிடத்திலும், ஐஸ்வர்யா இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இறுதிச் சுற்றில் உள்ள நான்கு போட்டியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தினமும் குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க கடந்த சில நாட்களாக ரித்விகாவிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதாவது பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில் ஒருநாள், ஐஸ்வர்யா விளையாட்டாக பிக் பாஸுக்கு ஐ லவ் யூ சொன்னார். அதோடு தன்னைத் திருமணம் செய்து கொள்கிறீர்களா எனவும் அவர் கேட்டார். அன்று முதல் இன்று வரை பிக் பாஸின் செல்லக்குட்டி ஐஸ்வர்யா தான் என பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.

ஐஸ்வர்யாவின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்கு வந்தபோது கூட அவரை, பிக் பாஸின் மாமியார் என்றே நெட்டிசன்கள் கலாய்த்தனர். கடந்த சீசன் போட்டியாளர் ஆரத்தி, பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக சென்ற போதுகூட பிக் பாஸ் வீட்டு மருமகளே என ஐஸ்வர்யாவை அழைத்தார்.

இப்படி பிக் பாஸின் செல்லக்குட்டியாக இருப்பதால் தான், எவ்வளவோ சர்ச்சைகளில் சிக்கியும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டு வருகிறார் என்ற பேச்சும் உள்ளது. டைட்டிலையும் அவர் தான் வெல்வார் என்பதையும் கடந்த சீசன் போட்டியாளர்கள் முதற்கொண்டு பார்வையாளர் வரை ஒரே குரலாக சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ரித்விகாவின் நடவடிக்கைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவருடன் பிக் பாஸ், பிக் பாஸ் என அடிக்கடி கூறி வருகிறார். ஐஸ்வர்யாவைப் போலவே தானும் பிக் பாஸின் செல்லக்குட்டியாக மாறி பட்டத்தை தட்டிச் சென்று விட வேண்டும் என்பது தான் ரித்விகாவின் புதிய ஸ்ட்ராடஜியா எனத் தெரியவில்லை.


Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019