ஜெயாவை குற்றவாளியென அறிவிக்க கோரிய கர்நாடகாவின் மறுசீராய்வு மனு தள்ளுபடி

ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவிக்கக் கோரிய கர்நாடகாவின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2015ஆம் ஆண்டு தீர்ப்பளித்தார்.

அதனையடுத்து சிறை சென்ற ஜெயலலிதா தரப்பில் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசரித்த தனி நீதிபதி குமாரசாமி, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை விடுவித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது. அதன் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தும், அம்மாநில உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் வழக்கில் இருந்து அவர் விலக்கப்படுவதாக நீதிபதிகள் கூறினார்கள்.

அவர் இறந்துவிட்டதால் அவரை குற்றவாளி என பிரகடனம் செய்து சிறை தண்டனை விதிக்க முடியாது எனவும் கூறினர். கர்நாடக மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. ஆனால் கர்நாடகத்தின் மறுசீராய்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டது.

இதனையடுத்து மீண்டும் கர்நாடக அரசு மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்தது. அதில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகே ஜெயலலிதா மறைந்ததால் அவரையும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு மனுவில் குறிப்பிட்டிருந்தது. கர்நாடகாவின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018