பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் அறிமுகமானவர் சந்திரன். இப்படம் ரசிகர்களை கவர்ந்ததால், கயல் சந்திரன் என பெயர் வைத்துக் கொண்டார். இவரும் டி.வி. தொகுப்பாளினி அஞ்சனாவும் காதலித்து வந்தார்கள்.
பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் 2016ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்கள். திருமணத்துக்குப் பிறகு டி.வி நிகழ்ச்சிகளுக்கு இடைவெளிவிட்ட அஞ்சனா, கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமடைந்தார்.
இவருக்கு சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், சில தினங்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.