ஆங்கிலம் என்பது ஒரு மனநோய் : துணை ஜனாதிபதி வெங்கையா பேச்சு

ஆங்கில மனப்பான்மை என்பது ஒரு மனநோயாகும் “ என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். டெல்லியில் சமீபத்தில் நடந்த இந்தி தின விழாவில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ‘ஆங்கிலம் என்பது ஆங்கிலேயர் இந்தியாவில் விட்டுச்சென்ற ஒரு நோய்” என கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், தான் அவ்வாறு கூறவில்லை என துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

கோவாவில் நடந்த தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் 4வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: சில ஊடக பிரிவுகள் ஆங்கிலம் ஒரு நோய் என நான் கூறியதாக எழுதியுள்ளன. ஆங்கிலம் ஒரு மனநோய் என்று நான் கூறவில்லை. ஆங்கிலம் என்பது ஒரு நோயல்ல.

ஆனால், ஆங்கில மனப்பான்மை என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் பெற்ற ஒரு நோயாகும். ஆங்கிலேயர்கள் சென்று விட்டனர். ஆனால், தாழ்வு மனப்பான்மையை அவர்கள் உருவாக்கி உள்ளனர். ஆங்கிலேயர்கள் உயர்ந்தவர்கள், வெளிநாட்டவர்கள் உயர்ந்தவர்கள், நாம் ஒன்றுமில்லை என்ற எண்ணத்தை கொடுத்து சென்றுள்ளனர்.

இந்த மனநிலையில் இருந்து நாம் வெளியே வரவேண்டும். இந்த நாட்டின்  உயர்ந்த பாரம்பரியம் நமது கடந்த காலம் மற்றும் உயர்ந்த தலைவர்களை கொண்டுள்ளதை நினைத்து நாம் பெருமைப்படவேண்டும்.இந்தியா எந்த நாட்டினாலும் தாக்கப்படவில்லை. ஆனால், படையெடுப்பாளர்களால் அது சிதைக்கப்பட்டுள்ளது. 

படையெடுப்பாளர்கள் நம்மை ஆட்சி செய்தார்கள். அவர்கள் நம்மை அழித்து விட்டார்கள். பொருளாதார ரீதியாக மட்டும் நம்மை அழிக்கவில்லை. மனரீதியாகவும் நம்மை அழித்துவிட்டனர். சிலர் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும். வெளிநாட்டு மொழியை கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. 

Ninaivil

திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
10 MAR 2019
Pub.Date: March 15, 2019