பிரதமர் மோடியை கொல்ல சதி: நக்சல் ஆதரவாளர் 5 பேர் கைது: விவகாரத்தில் தலையிட முடியாது

கோரேகான்-பீமா வன்முறை கலவர வழக்கில் 5 சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த கோரேகான்-பீமா கிராமத்தில்  கடந்த 31ம் தேதி கலவரம் வெடித்தது. இதில், ஒருவர் பலியானார்.

பலர் படுகாயமடைந்தனர். இந்த கலவரத்திற்கு மாவோயிஸ்ட்டுகள் காரணமாக இருப்பது விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, மாவோயிஸ்ட் ஆதரவு  எழுத்தாளரான வரவர ராவ், சமூக ஆர்வலர்கள் சுதா பரத்வாஜ், வெர்னோன், அருண்பெரேரா, கவுதம் ஆகியோர் ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள்  சதித்திட்டம் தீட்டியிருப்பதாக மகாராஷ்டிரா போலீசார் கடிதம் ஒன்றை  கைப்பற்றினர். அதில், மோடியை கொல்லும் சதியில் இந்த 5 பேருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய  வந்தது. இதையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த விவகாரம் விஸ்ரூபம்  எடுத்தது.

இந்நிலையில், இவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும், கைது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும் வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாபர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திராசூட் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பளித்தது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கான்வில்கர் இருவரும் ஒரே மாதிரியான தீர்ப்பை அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:

தங்கள் மீதான புகாரை யார் விசாரிக்க வேண்டும் என்பதை குற்றம் சாட்டப்பட்டவர்களே தேர்வு செய்து கொள்ள முடியாது. இது வெறும் கைது வழக்கு மட்டுமல்ல; மாறுபட்ட அரசியல் கண்ணோட்டத்தை கொண்டதாகும்.  கைதானவர்கள் மாறுபட்ட கருத்தை கூறியதால் மட்டும் கைதாகவில்லை;

அவர்களுக்கு மாவோயிஸ்ட் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, இந்த கைது விவகாரத்தில் நீதிமன்றம்  தலையிட விரும்பவில்லை. கைதான 5 பேரின் வீட்டு காவலை மேலும் 4 வாரங்களுக்கு நீடிக்கிறோம். 

அதே நேரத்தில், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் கீழ்நீதிமன்றங்களை அணுகி முறையான சட்ட தீர்வை பெற்றுக் கொள்ளலாம். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் ஏற்க முடியாது.  இவ்வாறு  அவர்கள் கூறினர்.

மற்றொரு நீதிபதி சந்திராசூட் வழங்கிய தீர்ப்பில், ‘‘மாறுபட்ட கருத்துகளையும் ஏற்பதே ஜனநாயகத்தை வலுவாக்கும். இந்த கைது விவகாரத்தில் போலீசார் வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை. பல்வேறு  விஷயங்கள் மூடி மறைக்கப்படுகின்றன’’ என்றார். ஆனாலும், பெரும்பான்மை அடிப்படையில் தீபக் மிஸ்ரா, கான்வில்கர் வழங்கிய தீர்ப்பே ஏற்றுக் கொள்ளப்படும்.

புனே போலீசார் மகிழ்ச்சி

உச்ச நீதிமன்ற தீர்ப்பை புனே போலீசார் வரவேற்றுள்ளனர். புனே போலீஸ் கமிஷனர் வெங்கடேசன் கூறுகையில், ‘‘5 சமூக ஆர்வலர்கள் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் விசாரணை நடத்திய  போலீஸ் அதிகாரிகள், குழுவினருக்கு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியிருப்பதை பாராட்டுகிறேன். சரியான பாதையில் தொடர்ந்து எங்கள் விசாரணையை தொடருவோம்’’ என்றார்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019