எதிர்க்கட்சியாக மக்களை ஈர்க்க காங்கிரஸ் தவறிவிட்டது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

டெல்லியில் கட்சி உறுப்பினர்களிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். பிலாஸ்பூர், பஸ்தி, சிட்டோர்கர், தன்பட் ஆகிய பகுதிகளில் உள்ள உறுப்பினர்களிடையே நமோ ஆப் மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த காங்கிரஸ் ஆட்சின்போது விலையேற்றத்தால் மக்கள் தவித்து வந்ததையும், இப்போது விலையேற்றம் இல்லாமல் இருப்பதையும் உணர முடியும் என தெரிவித்தார். 

மேலும், காங்கிரஸ் கட்சியானது ஒரு எதிர்க்கட்சியாக மக்களை ஈர்க்க தவறியதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் பிரதான கொள்கையாக மத்திய அரசின் மீது பொய் புகார் கூறுவதும், அவதூறு பரப்புவதும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் பொய் பிரச்சாரங்கள் மூலம் மக்களின் கவனம் திசைத்திருப்பப்படுவதாகவும், அதனை பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்றி, மக்களுக்கு புரிதலை ஏற்படுத்த உழைக்க வேண்டும் எனவும் தனது கட்சி உறுப்பினர்களுடனான காணொளி காட்சி உரையாடலில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நக்சலைட்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 நக்சலைட்டுகள் சரணடைந்ததாகவும், நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் 20 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019