கேரளாவை போல் நாகாலாந்திலும் வெள்ளப்பெருக்கு - நிதிஷ் குமார் ரூ.ஒரு கோடி நிவாரண நிதி வழங்கினார்

கேரளாவை போல் நாகாலாந்து மாநிலமும் கன மழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சேதம் அடைந்துள்ளது. இதற்கிடையே, தங்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு நாகாலாந்து முதல்வர் கோரிக்கை விடுத்தார். ட்விட்டரில் இது தொடர்பான வீடியோ ஒன்றை இம்மாத தொடக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.  

அதில், நாகாலாந்தில் பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ள பாதிப்பால், முக்கியமான என்.எச் 29 நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. எனவே, வெள்ள பாதிப்பை சரி செய்ய நாகாலாந்து மாநிலத்திற்கு நிதி அளிக்க கோரி முதல்வர் ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், நாகாலாந்து முதல்வரின் கோரிக்கையை ஏற்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நிவாரண நிதியாக ரூ. 1 கோடி வழங்கியுள்ளார். நாகாலாந்து முதல்வரின் நிவாரண நிதி கணக்கிற்கு நிதியை அனுப்பிய நிதிஷ் குமார், முதல்வருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

அதில், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் உயிரழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த இக்கட்டான நிலையில் இருந்து நாகாலாந்து மக்கள் விரைவில் மீண்டு வருவார்கள் எனவும் நிதிஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019