‘பிக் பொஸ் – 2’ டைட்டிலை வென்று முடிசூடினார் ரித்விகா!


‘பிக் பொஸ் – 2’ டைட்டிலை வென்று முடிசூடினார் ரித்விகா!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பொஸ் பாகம்-2’ இன் பரபரப்பான இறுதிச் சுற்றில் ரித்விகா பிக் பொஸ் டைட்டிலை வென்றுள்ளார்.


கடந்த ஜூன் 17 ஆம் திகதி ஆரம்பமான இந்நிகழ்ச்சி நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவுக்கு வந்தது.

ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரும் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகினர்.

அதிலிருந்து ரித்விகா, ஜனனி ஆகியோர் வெளியேற ஐஸ்வர்யாவும், ரித்விகாவும் இறுதி சுற்றில் மோதினார்கள்.


பரபரப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரித்விகா பட்டத்தை வென்று வெற்றிக் கோப்பையைப் பெற்றார்.

இரண்டாம் இடத்தைப் பிடித்த ஐஸ்வர்யாவுக்கு ரூ.1 கோடி 60 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

தொடர்பு வசதிகள் இல்லாத வீடு. பிரபலங்கள் சிலர் சில மாதங்கள் தங்க வேண்டும். அங்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.


கண்காணிக்கப்பட்ட அந்த நடவடிக்கைகளில் சுவாரஸ்யம் தருபவை மக்களுக்குக் காட்டப்படும். இது `பிக் பிரதர்’ என்று சர்வதேச அளவிலும், `பிக் பொஸ்’ என இந்தியாவிலும் ஒளிபரப்பாகிறது.

தமிழில் இதன் முதல் பகுதி கடந்த ஆண்டு இடம்பெற்றது. இதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 2 ஆவது பாகம் தொடங்கப்பட்டு பல சர்ச்சைகளுக்கு இடையே நிறைவடைந்துள்ளது.


இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், சென்றாயன், பாலாஜி, நித்யா, பொன்னம்பலம், ஷாரிக், மகத், மமதி சாரி, வைஷ்ணவி, டேனி, ரம்யா என்.எஸ்.கே, அனந்த் வைத்தியநாதன், யாஷிகா ஆனந்த் ஆகிய 16 பேர் தொடக்க போட்டியாளர்களாக பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018