சர்வதேசப் போட்டிகளிலிருந்து விடைபெறுகிறார் ரஷ்ய காற்பந்து அணியின் கப்டன்…!!

ரஷ்யா கால்பந்து அணியின் தலைவரும், கோல்காப்பாளருமான இகோர் அகின்பீவ், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற போவதாக அறிவித்துள்ளார்.

தான் 15ஆண்டு காலம் அணிக்காக விளையாடி சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க இது சிறந்த தருணம் எனவும் கூறியுள்ளார்.மேலும், தான் விளையாடும் கழக அணியான சி.எஸ்.கே.ஏ மொஸ்கோவ் அணிக்கு தனது முழு பங்களிப்பை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

32வயதான இகோர் அகின்பீவ், சிறந்த கோல்காப்பாளர் என்பதனையும் தாண்டி அணியின் சிறந்த தலைவர் என்ற முத்திரையையும் பதித்தவர் ஆவார்.ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில், சொந்த நாட்டு அணியை காலிறுதி வரை அழைத்துச் செல்வதற்கு, இகோர் அகின்பீவ்வின் பங்களிப்பு அளப்பரியது.

உலகக்கிண்ண தொடரின் 2ஆவது சுற்றில் ஸ்பெயின் அணியிடம் ரஷ்யா அணி, தோல்வியை தழுவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்பெயின் அணியின் இரண்டு கோல்கள் போடும் வாய்ப்பை இகோர் அகின்பீவ் வின் தடுத்து அணியை காலிறுதிக்கு அழைத்துச் சென்றார்.

எனினும், ரஷ்யா அணி, காலிறுதி போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-4 என்ற கோல்கள் கணக்கில் குரேஷியா அணியிடம் தோல்வியை தழுவியது.உலகக்கிண்ண வரலாற்றில் ரஷ்யா கால்பந்து அணிக்கு முகவரியொன்றினை தேடிக் கொடுத்த மகத்தான பெருமைக்கும் இகோர் அகின்பீவ்வே சொந்தக் காரரர் என்றால் அது மிகையாகாது.

இந்நிலையில் அணிக்கு பல வெற்றிகளையும், பெருமைகளையும் தேடி தந்த இகோர் அகின்பீவ், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற போவது பலரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.கடந்த 2004ஆம் ஆண்டு ரஷ்யா கால்பந்து அணியில் இணைந்த இகோர் அகின்பீவ், அணிக்காக 111 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அத்தோடு, ரஷ்யாவின் முன்னணி கால்பந்து கழக அணியான சி.எஸ்.கே.ஏ மொஸ்கோவ் அணிக்காகவும் விளையாடுகிறார். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அந்த அணிக்காக விளையாடும் அவர் 406 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019