அய்யோ, அது நான் இல்லை, நான் இல்லை: 'பிக் பாஸ்' ஐஸ்வர்யா

தன் பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

பிக் பாஸ் 2 ரன்னர் அப்பான ஐஸ்வர்யா தத்தாவுக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்துள்ளனர். அவரை திட்டுபவர்கள் திட்டிக் கொண்டிருந்தாலும், வாழ்த்துபவர்கள் வாழ்த்துகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்ததில் இருந்து ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார் ஐஸ்வர்யா.ஐஸ்வர்யா தத்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து ஆரவ் ட்வீட்டியிருந்தார். அதை பார்த்த ஐஸ்வர்யா தத்தா, பாருங்க யார் வாழ்த்தியிருக்கிறார் என்று, நன்றி ஆரவ் என பதில் அளித்தார்.

கடைசியில் பார்த்தால் அது டுபாக்கூர் ஐஸ்வர்யா. பிரபலங்களின் பெயர்களில் சமூக வலைதளங்களில் போலி கணக்கு துவங்கி இது போன்று செய்வது வழக்கமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்து.

யாரோ @ aishwaryadutta 6 என்ற பெயரில் என் போன்று நடிக்கிறார். அது நான் இல்லை. இது குறித்து புகார் அளியுங்கள் என்று உண்மையான ஐஸ்வர்யா கோரிக்கை விடுத்து ட்வீட் போட்டுள்ளார்.

ட்விட்டரில் என்னை பின் தொடரும் 12.7 ஆயிரம் ஃபாலோயர்களுக்கு நன்றி என்று ஐஸ்வர்யா இன்று தெரிவித்தார். தற்போது அவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 13.2 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

ட்விட்டரில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு அவர் பிக் பாஸுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.முன்னாள் போட்டியாளர் ஜூலி போன்றே தனது பெஸ்ட்டியின் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா தத்தா. பெஸ்ட்டியின் பெயர் ஃபைசி

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019