பிரதமர் மோடி நாட்டை பிளவுப்படுத்துகிறார் - ராகுல் குற்றச்சாட்டு

மகாத்மா காந்தியால் ஒன்றிணைக்கப்பட்ட இந்தியாவை பிரதமர் மோடி பிளவுப்படுத்துகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி மகாராஷ்டிரா மாநிலம், வார்தா நகரில் உள்ள காந்தி சேவாசிரமத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் இன்று வருகை தந்தனர்.

இங்கு நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் 'காந்தி சங்கல்ப யாத்திரை’ என்ற பெயரில் வாத்ரா நகரில் நடைபெற்ற அமைதி பேரணியில் பங்கேற்றனர். 

பேரணியின் முடிவில் இன்று மாலை தொடங்கிய அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி மகாத்மா காந்தியால் ஒன்றிணைக்கப்பட்ட இந்தியாவை பிரதமர் மோடி பிளவுப்படுத்துவதாக குறிப்பிட்டார்.

இந்த நாட்டை கட்டமைக்க வேண்டும் என இளைஞர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் எந்த அன்பளிப்பையும் எதிர்பார்க்கவில்லை. தங்களது உரிமையான அரசு வேலைவாய்ப்பை மட்டுமே அவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

உலகம் முழுவதும் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் எரிபொருள் விலை உயர்ந்தபடி உள்ளது. மோடியின் தலைமையிலான அரசு மக்களிடம் இருந்து பணத்தை திருடி, நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையின்போது மக்கள் வங்கிகளின் வெளியே வரிசையில் காத்திருக்க இந்த நாட்டிலுள்ள திருடர்கள் தங்களின் கருப்புப்பணத்தை எல்லாம் வெள்ளையாக மாற்றி கொண்டனர்.

மகாத்மா காந்தி தனது வாழ்நாள் முழுவதும் நேர்மைக்காக போராடினார். ஆனால், காந்தியின் கொள்கைகள் மற்றும் எதற்காக அவர் தனது வாழ்க்கையை தியாகம் செய்தாரோ, அதற்கு எதிராக இன்றைய பிரதமர் போராடி வருகிறார். நாட்டை ஒன்றிணைக்க வேண்டும் என்று காந்தி பேசி வந்தார். ஆனால், பிரதமர் மோடி நாட்டை பிளவுப்படுத்துகிறார்.

அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று கூறினாரே, அது உண்மையா, பொய்யா? நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையை மோடி பொய்யாக்கி விட்டார். எனவே, இப்போது நாட்டை முன்னேற்றுவதற்காக காங்கிரஸ் மீது அதே நம்பிக்கையை நீங்கள் வைக்க வேண்டும் என்றும்ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019