வீரருக்கு வீரர் விதிமுறை மாறுபடுவது நியாயம் அல்ல- ஹர்பஜன் சிங்

ஒரு வீரருக்கு ஒரு விதி, மற்றொரு வீரருக்கு இன்னொரு விதி என்பது நியாயம் அல்ல என்று இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு மீது ஹர்பன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் தேர்வு குறித்து சமீப காலமாக விமர்சனம் எழுந்து வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவிற்கும், கருண் நாயருக்கும் வாய்ப்பு கொடுக்காதது குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் எழுப்பி வரும் நிலையில் ஒரு வீரருக்கு ஒரு விதி, மற்றொரு வீரருக்கு இன்னொரு விதி என்பதில் நியாயம் இல்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘மூன்று மாதங்களான ஒரு வீரரை பெஞ்ச் வைத்து விட்டு அதன்பின் அணியில் தேர்வு செய்யாதது மிகவும் மோசமானது. இது வினோதமாக உள்ளது.அவர்கள் தேசிய அணிக்கு எப்படி தேர்வு செய்கிறார்கள், அதற்கான அளவுகோல் என்ன போன்றவற்றின் தேர்வுக்குழுவின் சிந்தனையை பற்றி புரிந்து கொள்வது வேதனையளிக்கிறது.

ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிமுறை இருப்பதாக அறிகிறேன். சில வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. சில வீரர்கள் திறமையை காண்பிக்க தவறிவிட்டால், அதன்பிறகு ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. இது நியாயமானது அல்ல’’ என்றார்.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019