பெரியாற்றுமுனை ரேன்ஞர்ஸ் அணி சம்பியன்

பெரியாற்று முனை ரேன்ஞர்ஸ் மைதானத்தில் கடந்த (28) அடப்பனா வயல் புளூபேர்ட்ஸ் மற்றும் பெரியாற்று முனை ரேன்ஞர்ஸ் அணியினர் ஒன்றையொன்று எதிர்த்தாடினர் இரண்டுக்கு இரண்டு கோல் கணக்கில் ஆட்டம் சம நிலையானது.

இதனை தொடர்ந்து பெனால்டி முறை மூலமாக ரேன்ஞர்ஸ் அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

சுமார் 50 அணிகள் பங்கு பற்றிய இறுதிச் சுற்றுத் தொடரில் போட்டி வெகு விமர்சையாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பியன் பட்டத்தை தனதாக்கிய ரேன்ஞர்ஸ் அணிக்கு 30000 ரூபா பணப் பரிசும் கேடயமும், இரண்டாம் இடத்தை பெற்ற புளூபேர்ட்ஸ் அணிக்கு 20000 ரூபா பணப் பரிசும் கேடயமும் வழங்கப்பட்டன.

போட்டியில் பங்கு பற்றிய அனைத்து அணிகளுக்கும் உதைப் பந்தும் இதன் போது வழங்கப்பட்டதுடன் விசேடமாக கடந்த காலங்களில் விளையாட்டில் ஈடுபட்டு ஓய்வு பெற்ற மூத்த விளையாட்டு வீரர்களும் 100 க்கும் மேற்பட்டோர்கள் பதக்கங்கள் அணிவித்தும் பரிசில்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்கள்.

சிறந்த விளையாட்டு வீரராக ரேன்ஞர்ஸ் அணியின் சார்பில் பனூஸ் அவர்களும் சிறந்த கோல் காப்பாளராக புளூபேர்ட்ஸ் அணியின் சார்பில் அஸ்ராஸ் போன்றோர்களும் தெரிவு செய்யப்பட்டு விசேடமாக கேடயங்களும் வழங்கப்பட்டன.

இவ் இறுதிச் சுற்றுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான அப்துல்லா மஹரூப், கிண்ணியா நகர சபை உறுப்பினரும் போட்டியை தலைமை தாங்கி நடாத்தியவருமான நிஸார்தீன் முஹம்மட் கலந்து கொண்டு கிண்ணங்களையும், ஏனைய பரிசில்கள் கௌரவிப்புக்களையும் இறுதியாக வழங்கி வைத்தார்கள்.

மேலும் கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபில காலகே, கிண்ணியா பகுதிக்கான இராணுவ பொறுப்பதிகாரி திஸாநாயக்க, கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான நிவாஸ்,கலீபத்துள்ளா, நிஹால் அஹமட் மற்றும் கந்தளாய் பிரதேச சபை உப தவிசாளர் சட்டத்தரணி மதார், தம்பலகாமம் பிரதேச சபை உறுப்பினர்களான தாலிப் அலி, ரெஜீன் உட்பட பலரும் பங்கேற்றனர். இவ் நிகழ்வில் உரையாற்றிய அப்துல்லா மஹரூப் எம்.பி

கிண்ணியாவில் உள்ள எட்டு வட்டாரங்களில் இருந்து பங்கு பற்றிய கழகங்களுக்குள் இறுதியாக பெரியாற்று முனை வட்டாரத்துக்குள் இருக்கும் இரு கழகங்களே இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன . விளையாட்டு கழகங்களை மேம்படுத்த உபகரணங்களுக்காக பத்து இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளேன். ரேன்ஞர்ஸ் மைதானம், அடப்பனாவயல் புளூபேர்ட்ஸ் மைதானம் ஆகிய மைதானங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐம்பது வருட காலம் பழமை வாய்ந்த இவ் இரு கழகங்களுக்கும் வரலாறு உண்டு அன்றைய இரு அணிகளான நீலக் கட்சி பச்சைக் கட்சி போன்று விளையாட்டில் போட்டித் தன்மைகளைக் கொண்டு விளையாட்டுக்கள் அமையப் பெற்றன . வெற்றி தோல்வியை இரு அணிகளும் தாங்கிக் கொள்ள வேண்டும். பொறுமை நிதானம் என்பனவற்றை கடைப் பிடித்தவர்களாக தங்களது விளையாட்டுத் திறமைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

Ninaivil

திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
யாழ். உடுப்பிட்டி
சுவிஸ் Dietikon(ZH)
10 JUN 2019
Pub.Date: June 11, 2019