மைதான நிகழ்ச்சிகளில் வட மாகாண மாணவர்கள் ஆதிக்கம்; 7புதிய சாதனைகளும் முறியடிப்பு

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகிய 34 ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் 2ஆவது நாளான நேற்று நண்பகல் நடைபெற்ற போட்டிகளின் முடிவில் ஏழு புதிய போட்டிச் சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.

12, 14, 18 மற்றும் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவுகளில் நடைபெறுகின்ற இம்முறைப் போட்டித் தொடரின் முதல் நாளில் 3 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான நீளம் பாய்தல் போட்டியில் பாணந்துறை நல்லாயன் கன்னியாஸ்திரிகள் மட கல்லூரியைச் சேர்ந்த ஷூஹாரா சதமினி 4.89 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

அத்துடன், 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பரிதி வட்டம் எறிதல் போட்டியில் கந்தானை புனித செபஸ்தியார் பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த ஹேஷானி மஹேஷpகா 38.98 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து புதிய போட்டிச்சாதனையும்,12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உயரம் பாய்தலில் கொழும்பு கேரி கல்லூரியைச் சேர்ந்த ஒமெத் சொனித்து 1.50 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டிச் சாதனையையும் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டிகளின் இரண்டாவது நாளான நேற்று நண்பகல் வரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் 4 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

இதில் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் கொழும்பு புனித பேதுரு கல்லூரி மாணவன் ருமேஷ் தரங்க (55.58 மீற்றர்), 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் கொழும்பு பௌத்த மகளிர் கல்லூரி மாணவி கே. குருகுலசூரிய (10.05 மீற்றர்), 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தெஹிவளை எலீடியா சர்வதேசப் பாடசாலை மாணவி தினாரா பண்டார தாலா (12.65 செக்.), 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பென்தர காமினி மத்திய மகா வித்தியாலய மாணவி செல்ஸி மெலனி பென்தரகே (12.27 செக்.) ஆகியோர் புதிய போட்டிச் சாதனைகளை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்ற மைதான நிகழ்ச்சிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த வட மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஒரு தங்கம், 4 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

நேற்றுமுன்தினம் (01) நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஏ. புவிதரன் 4.55 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

அவருக்குப் பலத்த போட்டியைக் கொடுத்த யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவன் ஜதூஷன், 4.45 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தையும்,குளியாப்பிட்டிய பிபிலதெனிய மகா வித்தியாலத்தைச் சேர்ந்த டில்ஷhன் மல்லேவ 4.00 மீற்றர் உயரத்தைத் தாவி மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை,12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட கிளிநொச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஸ்ரீ அருணவி 4.53 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

இது இவ்வாறிருக்க நேற்று காலை நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் பங்குகொண்ட யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் சுசிந்திரகுமார் மிதுன்ராஜ்,50.83 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

குறித்த போட்டியில் மிதுன்ராஜுக்கு பலத்த போட்டியைக் கொடுத்த பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரி மாணவன் ருமேஷ் தரங்க 55.58 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவி வி. சாத்விகா, 3.00 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அத்துடன், 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் மகாஜனா மாணவி சி. ஹெரீனா 1.55 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019