அஜித்கூட நடிச்சிருக்கேன்... ஆனா விஜய் வேற லெவல்… ஓவராக ஐஸ் வைத்த யோகிபாபு!

சர்கார் ஆடியோ லாஞ்ச்சில் விஜய் வேற லெவல் என நடிகர் யோகிபாபு புகழ்ந்துள்ளார். சர்கார் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய யோகிபாபு விஜய்யுடன் நடந்த பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். மெர்சல் திரைப்படத்தில் ஐந்து ரூபாய் டாக்டர் யார் என்று சமந்தா விசாரிக்கும்போது, விஜய்யை யோகிபாபு காலாய்ப்பார்.

அந்த காட்சியில் ஒருதடவை சொல்லிவிட்டு விட்டுவிட்டாராம். இது தொழில், நடிக்கதான் வந்திருக்க மீண்டும் சொல் என விஜய் கூறினாராம். அதேபோல் டப்பிங்கிலும் நடந்ததாக தெரிவித்தார். அந்த பெரிய மனசு விஜய்யண்ணாவுக்குத்தான் வரும் என்றும், வேறு யாராவது இருந்தால் என்னை கலாய்க்க விடுவார்களா என சந்தேகம்தான் என்று சொன்னார்.

மெர்சல் படத்தில் விஜய்யை கலாய்த்தது போல, சர்கார் திரைப்படத்திலும் கலாய்த்திருப்பதாக அவர் கூறினார். எந்த கடையில் முடி வெட்டுகிறீர்கள் என பிரசன்னா கேட்டதற்க்கு நான் முடி வெட்டுவதே இல்லை. ஏனென்றால் எனக்கு மூளை சோறு போடவில்லை. முடிதான் சோறு போடுகிறது என பதிலளித்தார்.

அதேபோல், இதுவரை நடித்த நடிகர்களைவிட விஜய் எந்தவிதத்தில் பெஸ்ட் எனக் கேட்கப்பட்டதற்கு, நான் பெரிய நடிகர்களுடன் நடித்துக்கொண்டிருக்கிறேன். எல்லோருமே பெஸ்ட்தான்., ஆனால் விஜய் வேற லெவல் எனக் கூறினார்.


Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019