வைரஸ் தொற்றுக்குள்ளான போலியோ தடுப்பு மருந்துகள்: விசாரணைக்கு உத்தரவு

போலியோ தடுப்பு மருந்துகளில் வைரஸ் கிருமிகள் கலந்திருந்தமை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய சுகாதார அமைச்சகம் இன்று  உத்தரவிட்டுள்ளது.


உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா, தெலங்கானா மாநிலங்களில் வழங்கப்பட்ட போலியோ தடுப்பு மருந்தில் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கையில் இறங்கிய மத்திய அரசு, போலியோ தடுப்பு மருந்துகளை தயாரித்து வழங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு சீல் வைத்தது.

மேலும் உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், குறித்த போலியோ தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தை மூட சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாகவே விரிவான விசாரணை நடத்த சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதுடன், மேலும் நாடு முழுவதும் இந்த நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட போலியோ மருந்துகளை விற்பனை செய்யாமல் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)
திருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)
மன்னார் பெரியமடு
லண்டன்
17 DEC 2018
Pub.Date: December 19, 2018
திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018