சபரிமலையில் பெண்கள் அனுமதியை எதிர்த்து மறுசீராய்வு மனுதாக்கல் இல்லை: கேரள முதல்வர்

சபரிமலை பிரச்னையில் மறுசீராய்வு மனு, தாக்கல் செய்யப்படாது என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தரிசனத்திற்கு வரும் பெண்களை யாராலும் தடுக்க முடியாது என்றும் கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறினார்.

சபரிமலை  ஐயப்பன் கோயிலில் இளம்பெண்களும் செல்லலாம் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு இந்து  அமைப்பினரிடம்  இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த சில நாட்களாக கேரளம்  முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து ேபாராட்டங்கள், பேரணிகள்  நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்வது குறித்து, திருவனந்தபுரத்தில் நடக்கும் தேவசம்ேபார்டு ஆலோசனை கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தேவசம்போர்டு தலைவர்  பத்மகுமார் கூறியிருந்தார். 

இந்த நிலையில் நேற்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு  ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. தேவசம்போர்டு உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்திற்கு பின் பத்மகுமார் கூறியதாவது: உச்ச நீதிமன்ற  தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய தேவையில்லை என்று ேகரள  அரசு தீர்மானித்துள்ளது.

பல்வேறு தரப்பு கருத்துக்களை கேட்ட பின்னர்தான்  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மறு சீராய்வு மனு, தாக்கல் செய்தால்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பது சந்தேகம்தான். அதனால்தான் மறுசீராய்வு மனு, தாக்கல் செய்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு  தேவையான அனைத்து வசதிகளும் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. 

நிலைக்கல்,  பம்பை போன்ற இடங்களில் கூடுதல் வசதி ஏற்படுத்தப்படும். நிலைக்கலில் 600  கழிப்பறைகளும், பம்பையில் 700 கழிப்பறைகளும் கட்டப்படும். பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு பத்மகுமார் கூறினார். இதற்கிடையே நேற்று கேரள அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்  முதல்வர்  பினராய் விஜயன் கூறுகையில் ‘‘சபரிமலை  விவகாரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவை கேரள  அரசு  நிறைவேற்றும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி சபரிமலையில்  தரிசனத்துக்கு  வருபவர்களை யாராலும் தடுக்க முடியாது. பெண்களுக்கு உரிய  பாதுகாப்பு  வழங்கப்படும். தீர்ப்பை அமல்படுத்தும் கடமை கேரள அரசுக்கு  உண்டு. தீர்ப்பை  எதிர்த்து மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட மாட்டாது’’ என்றார்.

‘ஆச்சார விதிமுறைகள் அழிந்துவிடும்’

திருவிதாங்கூர்  மன்னர் குடும்பத்தை  சேர்ந்த கவுரிலட்சுமி பாய் கூறுகையில், ‘‘இளம்பெண்களும்  சபரிமலைக்கு செல்லலாம்  என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வேதனையான  சம்பவம் ஆகும்.

இந்த  உத்தரவால் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்து  மதத்தின் நம்பிக்கைகள், ஆச்சார  விதிமுறைகள் அழிந்துவிடும். எனது  பாட்டியான மகாராணி சபரிமலை  சென்றது உண்மைதான். ஆனால் அவர் கர்பப்பையை  அகற்றிய பின்னர்தான்  சபரிமலைக்கு சென்றார். எனக்கு தெரிந்தவரை சபரிமலையில்  இதுவரை இளம்பெண்கள்  யாரும் தரிசனத்துக்கு சென்றதில்லை.

மன்னர்  குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட  பல இளம்பெண்கள் சபரிமலைக்கு சென்றதாக  கூறுகின்றனர். அதில் எந்த உண்மையும்  இல்லை’’ என்றார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து முதல் முறையாக திருவிதாங்கூர் மன்னர்  குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கருத்து  தெரிவித்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018