சபரிமலை கோவிலுக்கு செல்ல நவம்பர் 16-ந்தேதி முதல் பெண்களுக்கு அனுமதி

சபரிமலை கோவிலுக்கு செல்ல அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி முதல் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

இதற்கிடையே சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் முடிவுக்கு எதிராக கேரளாவில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பந்தளத்தில் நடைபெற்ற சரணகோஷ பேரணியில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. கொச்சியில் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து தடைபட்டது.

கோட்டயத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஒரு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநில அரசின் வற்புறுத்தல் காரணமாக மேல்முறையீடு செய்யும் முடிவை தேவசம் போர்டு கைவிட்டு இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

பந்தளம் அரச குடும்பத்தினரை சந்தித்த பிறகு பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா வெள்ளிக்கிழமை பந்தளத்தில் காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று குறிப்பிட்டார்.

மாநில அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் சுப்ரீம் கோட்டில் மேல்முறையீடு செய்யவேண்டும் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் முல்லபள்ளி ராமசந்திரன் வலியுறுத்தி இருக்கிறார்.

பா.ஜனதா இளைஞர் அமைப்பு சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் நடைபெற்ற இப்போராட்டத்தின்போது தேவசம் மந்திரியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்று போராட்டத்தின்போது அவர்கள் வலியுறுத்தினர். 

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019