பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

தமிழக காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து உதித்த பா.ஜ.க தலைவர் தமிழசை சௌந்தராஜன். குழந்தை பருவத்தில் அனைவரும் வெயிலோடும், மழையோடும் விளையாடினால், தமிழசை மட்டும் அரசியலோடும், பேச்சாளார்களோடும் விளையாடி வளர்ந்தார்.

அரசியல் மீது சிறு வயது முதலே பேரார்வம் கொண்டிருந்தார் தமிழசை. மற்றும் மேடை பேச்சு, பேச்சுப் போட்டிகளில் பங்குக் கொள்வதில் அதிக பிரியம் கொண்டிருந்தவர். அரசியலும், பேச்சும் பிரிக்க முடியாதவை. அதை இரண்டையுமே தனது ஊன்றுகோலாக கொண்டு வளர்ந்தார் தமிழிசை.

ஜூன் 2, 1961 அன்று நாகர்கோவிலில் பிறந்தவர் தமிழிசை. இவரது அப்பா தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் ஆவார். இவர் ஒரு விடுதலை போராட்ட வீரரும் கூட. பெருந்தலைவர் காமராஜர் ஐயாவுடன் இணைந்து பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு. இவர் முன்னாள் இந்திய மக்களவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழில் இலக்கிய புலமை என்று பன்முகம் கொண்டிருந்த திறமையாளர்.

குமரி ஆனந்தன் ஐயாவுக்கு மொத்தம் நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன். அந்த நான்கு மகள்களில் ஒருவர் தான் தமிழிசை சௌந்தராஜன். இவர் எம்.பி.பி.எஸ் முடித்த பிறகு, மகப்பேறியல் & பெண்ணோயியல் கல்வியை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் பயின்றார். இவர் கனடாவில் Sonology மற்றும் FET சிகிச்சையில் பயிற்சி பெற்றிருக்கிறார். தமிழிசை மட்டுமின்றி அவரது கணவர் சௌந்தராஜன் அவர்களும் மருத்துவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு வயதில் இருந்தே அரசியல் மீது பேரார்வம் கொண்டிருந்த தமிழசை அவர்கள் மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் போதே மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும், இவர் முழுநேர பா.ஜ.க. அரசியல் தலைவராக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 1999 முதல், இன்று வரை 19 ஆண்டு காலமாக தமிழக பா.ஜ.க வில் தனது பெரும் பங்களிப்பை ஆற்றிவருகிறார்.

தமிழசை சௌந்தராஜனின் சித்தப்பா யார் தெரியுமா? வசந்தன் கோ வசந்த குமார் ஆவர். இவர் காங்கிரஸ் கட்சியின் வர்த்தக பிரிவு தலைவராக இருந்து வருகிறார். 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அணியில் எஸ்.பி சூர்யகுமார் என்பவரை எதிர்த்து வெற்றிக் கண்டார்.

தமிழிசை அவர்கள் பெண் சக்தி இயக்கம் என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராக விளங்கி வந்தார். மேலும், பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் அவர்கள் தலைவராக இருக்கும் பொற்றாமரை இலக்கிய அமைப்பின் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் ஒரு சிறந்த பேச்சாளர் என்று கூறுகிறார்கள்.

பாஜக கொள்கைகள் படி அமைச்சர் பதவி வகிக்கும் ஒருவர் தலைவர் பதவி வகிக்க முடியாது என்ற காரணத்தால் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைவர் பதவியில் இருந்து விலக, தமிழசை சௌந்தராஜன் தலைவராக 2014ம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தான் பாஜகவின் முதல் பெண் தலைவர் ஆவார்.


Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018