திருகோணமலை - திரியாய்க் காட்டில் ஒரு தமிழ்க்_கல்வெட்டு. தமிழ்ப்_பௌத்தர்களுடைய பெரும்பள்ளி பற்றித் தகவல்.


சில நாட்களுக்கு முன் திருகோணமலை மாவட்டத்திலே புதிதாகக் கிடைத்த சில கல்வெட்டுகளை ஆராய்ந்தபோது மூதூரிலும் திரியாய்க் காட்டிலும் கிடைத்த இரண்டு தமிழ்க் கல்வெட்டுகள் மிகுந்த கவனத்தை ஈர்ப்பனவாய் அமைந்தன. மூதூரிலே கிடைத்த சாசனம் சைவ நிறுவனம் ஒன்றுடன் தொடர்புடையதாய் அமைய, மற்றது பௌத்த பெரும்பள்ளி ஒன்றைச் சேர்ந்ததாய் உள்ளது. இரண்டும் ஏறக்குறைய ஒரே காலத்தவை.

திரியாய்க் காட்டிலே கிடைத்த கல்வெட்டு நீண்டதாகவும் நன்கு பேணப்பட்டதாகவும் இருக்கின்றது. திருகோணமலையிலிருந்து திரியாய்க்குச் செல்லும் வழியில், முன்னர் மயிலங்குளம் என வழங்கி இப்போது மயிலவௌ என வழங்கப்படும் இடத்திலே தெருவிலிருந்து காட்டிற்குச் செல்லும் வழியில் சில அழிபாடுகள் காணப்படுகின்றன. இவை எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தவை. கட்டடம் ஒன்றின் தூண்களும் வேறு கருங்கற் பாகங்களும் இடிந்து சரிந்துள்ளன. ஏராளமான செங்கற்கள் குவிந்து காணப்படுகின்றன. இவற்றுக்கு அருகே இடிந்து காணப்படும் நிறுவனத்தின் பெயரையும் அதனைப் பாதுகாத்தோர் பெயரையும் எடுத்துரைக்கும் ஒரு தமிழ்க்கல்வெட்டு மிகவும் தெளிவாக வெட்டப்பட்டுச் சரிந்து வீழ்ந்து காணப்படுகிறது.

விக்கிரம சலாமேகப் பெரும்பள்ளி

பழைய கட்டடங்களின் அழிபாடுகளில் காணப்படும் இடங்களிலெல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் செல்லுமுன் புதையல் தேடுவோர் சென்றதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. அவ்வாறே இங்கும் எழுத்துப் பொறித்த கல் இருக்கும் இடத்தில் புதையல் உண்டு என்று யாரோ எண்ணிக் கல்வெட்டுக்கு அருகிலே குழி தோண்டியிருப்பதைக் காணலாம். நல்ல காலமாகக் கல்வெட்டுக்கு எந்தவிதச் சேதத்தையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை.இடிந்து கிடக்கும் கட்டடங்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்த விக்கிரம சலாமேகப் பெரும்பள்ளி என்ற பௌத்த பள்ளியின் கட்டடங்கள் எனக் கல்வெட்டால் அறியக்கூடியதாய் உள்ளது. அதே நூற்றாண்டில் அதே பெயரால் ஒரு சைவக்கோயில் (விக்கிரம சலாமேக ஈஸ்வரம்) குருணாகல் மாவட்டத்தில் இருந்தது என்பதை இன்னொரு தமழ்க் கல்வெட்டு அறியத் தருகின்றது என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.


வேளைக்காறப் படை


இந்தப் பெரும்பள்ளியைப் பாதுகாக்கும் பொறுப்பு அக்காலத்துத் தலைசிறந்த படைப்பிரிவினராகிய வேளைக்காறப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கணபதி என்னும் சேனாதிபதி இப்படையினரிடம் அப்பொறுப்பை ஒப்படைத்திருந்தான். நாட்டின் வேறுபாகங்களிலும் வேளைக்காறப் படையினர் பௌத்த, சைவ நிறுவனங்களின் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டமை பற்றி வேறும் தமிழ்க் கல்வெட்டுகள் உரைக்கின்றன. கி.பி.1128இல் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டு சோழர் காலத்தின் பின்னரும் வேளைக்காறப் படையினர் இலங்கையில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கினர் என்பதை அறிவித்து நிற்கிறது.

பெரும்பள்ளி

திருகோணமலை மாவட்டத்திலே பெரியகுளப்பகுதியில் சிதைந்து காணப்படும் ராஜராஜப் பெரும்பள்ளியைப் பற்றிக் கூறும்போது காலஞ்சென்ற பரணவிதான அவர்கள் அதனை, அழிந்த நிலையிலாவது இன்றுவரை பேணப்பட்டிருக்கும் ஒரேயொரு தமிழ்ப் பௌத்தப் பள்ளி எனக்கூறியிருந்தார். திருகோணமலை மாவட்டத்தில் இப்பொழுது தெரியவந்துள்ள விக்கிரமசலாமேகப் பெரும்பள்ளியின் அழிபாடுகளை இன்றுவரை காணப்படும் இன்னொரு தமிழ்ப் பௌத்தப் பள்ளி எனலாம்.

தமிழ்ப்பௌத்தர்கள்

தமிழ்நாட்டில் பௌத்தம் சிறப்புற்றிருந்த காலந்தொட்டு பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் அதன் பின்னரும் இலங்கையின் பல பாகங்களிலும், சிறப்பாகக் கிழக்கு மாகாணத்திலும் தமிழ்ப் பௌத்தர்கள் இருந்து வந்துள்ளனர் என்று கொள்ளச் சான்றுண்டு. பல்லவர் காலப் பாணியிலே இம் மாகாணத்தில் கிடைக்கும் புத்தர் சிலைகளும், பல்லவருடைய கிரந்த எழுத்திற் கிடைக்கின்ற சாசனங்களும் தமிழ்ப் பௌத்தருக்கும் இந்த மாகாணத்துக்கும் இருந்த தொடர்பைக் காட்டுகின்றன. இவற்றைவிடச் சோழர்காலத்தில் இங்கு வாழ்ந்த தமிழ்ப் பளத்தர்கள் தமிழிலேயே பல கல்வெட்டுகளையும் இங்கு எழுதி வைத்தனர்.

விக்கிரமசலாமேகப் பெரும்பள்ளி தமிழ்ப்பௌத்தர்கள் வழிபட்ட பள்ளிகளுள் ஒன்றாகக் கருதப்பட வேண்டிது.

 

Ninaivil

திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா Columbus Ohio
17 APR 2019
Pub.Date: May 13, 2019
திருமதி நிர்மலா செல்வநாயகம்
திருமதி நிர்மலா செல்வநாயகம்
யாழ். இளவாலை
கனடா
11 MAY 2019
Pub.Date: May 12, 2019